அரேபிய மொழியை மேம்படுத்தும் திட்டமொன்றினை கூகுள் முன்னெடுக்கவுள்ளது. இணையத்தில் அரபு மொழியின் உபயோகத்தினை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் பெயர் “Arabic Web Days” என்பதாகும். உலக சனத்தொகையில் 5% அதிகமானோர் அரேபிய மொழியை பேசுகின்ற போதிலும் இணையத்தில் வெறும் 3% குறைவான டிஜிட்டல் உள்ளடக்கங்களே ( Digital content) அரேபிய மொழியில் காணப்படுவதாகவும் கூகுள் சுட்டுக்காட்டுகின்றது.
இதனால் அரேபிய மொழிப் பாவனையை அதிகரிக்க கூகுள் இத் திட்டத்தினை கூகுள் முன்னெடுக்கவுள்ளது.
பல்வேறு பங்காளர்களுடன் இணைந்தே கூகுள் இதனை முன்னெடுத்து வருகின்றது. இதற்கென பல விசேட நிகழ்வுகளையும் கூகுள் ஒழுங்கு செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட புரட்சியில் கூகுள் முக்கிய பங்கு வகித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
Eelamurasu Australia Online News Portal