குமரன்

அவுஸ்ரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை- செயற்கை கருப்பை

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற செயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குறிப்பிட்ட காலத்தைவிட ஒரிரு வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் இன்குபேட்டர் கருவியில் வைத்து பாதுகாக்கப்படுகின்றனர். அதில் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பாதுகாப்பதில் சிரமம் உள்ளது. எனவே தாயின் கருப்பை போன்றே வடிவமைக்கப்பட்ட செயற்கை கர்ப்பபையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மேற்கு அவுஸ்ரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், ஜப்பானில் உள்ள தொகோகு பல்கலைக்கழக ஆஸ்பத்திரியின் நிபுணர்களும் இணைந்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த செயற்கை கருப்பை தாயின் கர்ப்பபை போன்று மிகவும் பாதுகாப்பானது. ...

Read More »

அவுஸ்ரேலியர்களிடம் காணப்படும் உதவேகமும், அணுகுமுறையும் விராட் கோலியிடம்

விராட் கோலியின் உதவேகமும், அணுகுமுறையும் அவருக்குள் ஒர் அவுஸ்ரேலியர் இருப்பதையே காட்டுகிறது என மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி இந்திய அணி டெஸ்ட் தொடர் முடிவடைந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு விளையாட உள்ளது. இந்தியாவுடன் விளையாடும் அவுஸ்ரேலியா அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. இலங்கை தொடர் முடிந்த பின் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கப்டன் மைக்கேல் கிளார்க் அளித்த பேட்டி ஒன்றில் விராட் ...

Read More »

தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் மீட்பர்! – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில், சிறிலங்கா நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கருத்து வெளியிட்டுள்ளார். பிரபாகரனை, தமிழ் மக்கள் ஏன் மகத்தான ஒரு தலைவராக விரும்பினார்கள் என்று தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடான ஆரம்ப தொடர்பு தொடர்பில், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு எரிக் சொல்ஹெய்ம் கருத்து வெளியிட்டார். பிரபாகரனை முதல்தடவையாகச் சந்திப்பதற்கு நான் சென்றிருந்த போது, இலங்கையில் யாருமே அதனை அறிந்திருக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல சிறிலங்காவின் அப்போதைய ஜனாதிபதி அனுமதி அளித்திருந்தார். இது ...

Read More »

லிசாவுக்கு நேர்ந்த துயரத்தை நினைத்தால் திகிலாக இருக்கிறது!

மூன்று வாரங்களுக்கு முன்பு காணாமல் போன 25 வயது ரேடியோலஜி மாணவி லிசா தெரிஸ், அமெரிக்காவின் அலபாமா காட்டில் கண்டுபிடிக்கப்பட்டார். “நான் அந்த வழியாக கார் ஓட்டிக்கொண்டு வந்தேன். அப்போது புதர்களுக்குப் பின்னால் ஏதோ விலங்கு அசைவதுபோல் தோன்றியது. மானாக இருக்கும் என்று நினைத்து, ஆர்வமாகத் தேடிச் சென்றேன். அங்கே ஒரு பெண் அழுக்காகவும் ஆடையின்றியும் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் ஓட ஆரம்பித்தார். அவரைத் துரத்திச் சென்று பிடித்தேன். மெலிந்த உடல் முழுவதும் பூச்சிக்கடிகள். சிக்குப் பிடித்த தலைமுடி. நகங்களில் அழுக்கு. மிரட்சியான ...

Read More »

பயங்கரவாத தாக்குதலில் மூன்று முறை உயிர் தப்பிய பெண்!

இந்த வருடம் இடம்பெற்ற மூன்று பயங்கரவாத தாக்குதல்களின் போது, சம்பவ இடங்களில் இருந்து உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மூன்று நாடுகளின் மூன்று இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது குறித்த பெண் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரத்தை சேர்ந்த 26 வயதுடைய Julia Monaco என்ற பெண்னே இவ்வாறு உயிர் தப்பியுள்ளார். பார்சிலோனாவில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போதும் Julia Monaco ஆபத்தின்றி உயிர் தப்பியுள்ளார். பார்சிலோனா ரம்பிலாஸ் பகுதியில் உள்ள கடை ...

Read More »

4ஜி கேமரா

4ஜி முறையில் இயங்கக்கூடிய வகையில் இந்த கேமரா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களுடைய வாகனம் எங்குள்ளது என்பதை உள்ளிட்ட விஷயங்களை நமக்கு தெரிவிக்கிறது. மொத்தம் ஏழு வகையான் லென்சுகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.  

Read More »

ஆவணப்படமே மிகச் சிறந்த ஊடகம்! – சொர்ணவேல் ஈஸ்வரன்

‘தங்கம்’(1995) படத்தின் மூலம் ஆவணப்பட உலகில் தனித்து அடையாளம் காணப்பட்டவர் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வழுதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் திரைக்கல்வியைப் பயிற்றுவிக்கும் இணைப்பேராசிரியராகத் தற்போது பணியாற்றிவருகிறார். பத்துக்கும் அதிகமான இவரது ஆவணப்படங்கள், சர்வதேச பட விழாக்களில் திரையிடத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு, பல விருதுகளையும் பெற்றுள்ளன. ஆவணப்படங்களை ‘நியூஸ் ரீல்’ என்ற புரிதலுடன் புறந்தள்ளும், தமிழ், இந்தியச் சூழலில், அவற்றை யதார்த்த அழகியலுடன் முன்வைத்துப் பார்வையாளர்களைத் ...

Read More »

எங்கள் காதலை சினிமாவாக எடுத்தால் நடிக்க தயார்: நாகசைதன்யா

எங்கள் காதலை சினிமாவாக எடுத்தால் அதில் நானும், சமந்தாவும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறோம் என்று நடிகர் நாகசைதன்யா கூறியிருக்கிறார். சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் 6-ந்திகதி கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. தனது காதல் அனுபவம் பற்றி கூறிய சமந்தா, “இந்த உலகத்தில் நாகசைதன்யாவை விட எதுவும் பெரிதில்லை. எங்களை பொருத்தமான அழகான ஜோடி என்று சொல்கிறார்கள். இதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். இதுபற்றி கூறிய நாகசைதன்யா, “சமந்தாவை விட இந்த உலகில் அழகான ...

Read More »

கடற்படையின் புதிய தளபதியாக தமிழர் நியமனம்..!

கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா கடற்படையின் 21 ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தற்போது கடற்படை தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவர் பிரதான தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடருக்கான அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடருக்கான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்ட்டுள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வரும் செப்டமர் 17ம் திகதி முதல் அக்டோபர் 11ம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அவுஸ்ரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்வில் இருந்த அவுஸ்ரேலிய அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் ஃப்ளாக்னர், நாதன் நைல் அணிக்கு திரும்பி உள்ளனர்.  முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஸ்டார்க் ...

Read More »