எங்கள் காதலை சினிமாவாக எடுத்தால் அதில் நானும், சமந்தாவும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறோம் என்று நடிகர் நாகசைதன்யா கூறியிருக்கிறார்.
சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் 6-ந்திகதி கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
தனது காதல் அனுபவம் பற்றி கூறிய சமந்தா, “இந்த உலகத்தில் நாகசைதன்யாவை விட எதுவும் பெரிதில்லை. எங்களை பொருத்தமான அழகான ஜோடி என்று சொல்கிறார்கள். இதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
இதுபற்றி கூறிய நாகசைதன்யா, “சமந்தாவை விட இந்த உலகில் அழகான பெண் யாரும் இல்லை. அவர் மனைவியாக அமைந்தது எனது அதிர்ஷ்டம். சமந்தாவின் குணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கோபம் வந்தால் மட்டும் என்னை முறைத்து பார்ப்பார். திட்ட மாட்டார். எங்கள் காதல் வாழ்க்கை மிகவும் இனிமையானது.
நாங்கள் சந்தித்தது முதல், எங்கள் திருமணம் வரை எங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் தொகுத்து சினிமாவாக எடுக்கலாம். யாராவது இதை படமாக தயாரித்தால் மகிழ்ச்சி அடைவேன். அந்த படத்தில் நானும், சமந்தாவும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.
Eelamurasu Australia Online News Portal