குமரன்

இணைய சேவை குறித்த ஆய்வில் அவுஸ்ரேலியாவுக்கு கடைசி இடம்!

Broadband- இணையப் பயன்பாடு தொடர்பில் மக்கள் திருப்தியடைகிறார்களா என உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அவுஸ்ரேலியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.  Ipsos Global Advisor என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சுமார் 28 நாடுகளைச் சேர்ந்த 21 ஆயிரம் பேரிடம், அவர்கள் பயன்படுத்தும் இணைய சேவை திருப்தியளிக்கிறதா எனக் கேட்கப்பட்டது. இதில் பங்கேற்ற அவுஸ்ரேலியர்களில் 61 வீதமானவர்கள் தமது இணையத்தொடர்பு திருப்தியளிப்பதாக இல்லை என தெரிவித்துள்ள நிலையில், இக்கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 28 நாடுகளில் அவுஸ்ரேலியா கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தமது இணைய சேவை தொடர்பில் மகிழ்ச்சியடையும் ...

Read More »

பாடசாலைகளுக்கான அடிப்படை நிதி $80 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பு!

NSW பாடசாலைகளுக்கான அடிப்படை நிதி $80 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்படுவதாக NSW மாநில முதல்வர் Gladys Berejiklian நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார். அத்துடன் NSW அரசாங்கப் பள்ளிகளுக்கான தேவைகள் அடிப்படையிலான கல்வி நிதி 1 பில்லியன் டொலருக்கும் அதிகமாக 8 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார். மாணவர் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளுக்கு $ 1.09 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் கணித கல்வியறிவுத் திட்டங்கள் மற்றும் ஆசிரியப் பயிற்சி ஆகியவற்றுக்கு அளிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Read More »

ரெனால்ட் கேப்டூர் இந்திய வெளியீடு: புதிய தகவல்கள்

ரெனால்ட் நிறுவனத்தின் கிராஸ்ஓவர் SUV ரக மாடலான கேப்டூர் இந்தியாவில் வெளியாவது சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. பிரென்ச் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் இந்தியாவில் புதிய கிராஸ்ஓவர் மாடலான கேப்டூர் அறிமுகம் செய்துள்ள நிலையில், ஆட்டோகார் இந்தியா வெளியிட்ட தகவல்களின் படி நவம்பர் மாத முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் புதிய கேப்டூர் ஏற்கனவே அதன் விற்பனையாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும், ரெனால்ட் கேப்டூர் செயலி அல்லது ரெனால்ட் இந்தியா வலைத்தளத்திலும் முன்பதிவு செய்ய முடியும். புதிய ...

Read More »

விஜய் சேதுபதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்

மேயாத மான் படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். சின்னத்திரையில் இருந்து மேயாத மான் படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுமாகியிருக்கும் ப்ரியா பவானி ஷங்கருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பொது சுகாதாரத் துறையில் ஏமாற்று நடைமுறைகள்!

விக்டோரியா மாநிலத்தின் பொது சுகாதார துறையில் கடுமையான அபாயங்களை விக்டோரியாவின் ஊழல் கண்காணிப்பு அமைப்பு இனங்கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறிப்பிடத்தக்க மற்றும் உறுதியான கொடுமைப்படுத்துதல் மற்றும் தொல்லை (bullying and harassment) ஆகியனவும் சுகாதார துறையில் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்டோரிய பொது சுகாதாரத் துறையில் ஏமாற்று நடைமுறைகள், மருந்து திருட்டு, மோசடி மறைப்புக்கள் மற்றும் மோசடியான பண வசூல், அதாவது fraudulent billing ஆகியவை நிலவுவதாக மாநிலத்தின் ஊழல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. உடல்நல சேவைகளில் இருந்து கட்டுப்பாட்டு மருந்துகள், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ...

Read More »

புதிய கடற்படை தளபதியாக ரணசிங்க!

சிறிலங்கா  கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இரண்டுமாதங்கள் மாத்திரமே சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக செயற்பட்ட ட்ராவிஸ் சின்னையா இன்றுடன் தனது கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றார். 55 வயதுடன் ஓய்வு பெரும் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவின் பதவிக் காலத்தை  மைத்திரிபால சிறிசேன விரும்பினால் நீடித்திருக்க முடியும், எனினும் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, மிகவும் குறுகிய காலத்திற்கு நாட்டின் கடற் படைத் தளபதியாக பதவி வகித்தவர் ...

Read More »

எச்.டி.சி. யு11 பிளஸ்

ஸ்மார்ட்போனின் புகைப்படம்  சீனாவின் TENAA தளத்தில் கசிந்த புகைப்படம் போன்றே காட்சியளிக்கிறது. பின்புற கமராவின் கீழ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் தெரிவிக்கப்பட்டது. புதிய எச்.டி.சி. ஸ்மார்ட்போனில் எட்ஜ் சென்ஸ் ஸ்குவீஸ் அம்சம், எச்.டி.சி. பூம்சவுண்டு மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. எச்.டி.சி. யு11 பிளஸ் எதிர்பார்க்கப்படு்ம சிறப்பம்சங்கள்: – 6.0 இன்ச் 1440×2880 பிக்சல் குவாட் எச்டி மற்றும் கார்னிங் கொரில்லா ...

Read More »

முதலை பொறிக்குள் சென்று நீந்தி விளையாடிய விசித்திர மனிதர்கள்

அவுஸ்ரேலியாவில் முதலைக்கு வைக்கப்பட்டிருந்த பொறிக்குள் சென்று தைரியமாக 4 பேர் புகைப்படம் எடுத்த நிகழ்வு அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் டோக்லஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள ஏரியில் முதலைகள் அதிக அளவில் உள்ளன. அவை அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடி வருகின்றன. சமீபத்தில் 79 வயது மூதாட்டி ஒருவர் ஆற்றில் உள்ள முதலைக்கு இரையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த ஏரியில் முதலைக்காக பொறி வைக்கப்பட்டிருந்தது. அந்த பொறியில் 4 பேர் தைரியமாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். பொறிக்குள் சென்றும் அதனை சுற்றியும் ...

Read More »

பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பிரபல பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு திரையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பிரபல வங்காள மொழி திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே இயக்கத்தில் 1959-ம் ஆண்டில் வெளியான ‘அபுர் சன்சார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷர்மிளா தாகூர். 1964-ம் ஆண்டு வெளியான ‘காஷ்மிர் கி காலி’  இந்தி படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகுக்கு அறிமுகமான ஷர்மிளா தாகூர் நடிப்பில் பின்னர் வெளியான ‘ஆராதனா’, ’மவுசம்’, ‘அமர் பிரேம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் உச்சநட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார். 1970-களில் மிகவும் பிரபலமாக இருந்த ராஜேஷ் ...

Read More »

பிரபுசாலமனிடம் பாராட்டு பெற்ற கொட்டாச்சியின் மகள் மானஸ்வி

பல படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் கொட்டாச்சி. இவரது நான்கு வயது மகள் மானஸ்வி தற்போது சதுரங்கவேட்டை-2, இமைக்கா நொடிகள், கும்கி-2 ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். இதில், சதுரங்கவேட்டை-2 படத்தில் திரிஷாவின் மகளாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாகவும் நடிக்கும் மானஸ்வி, பிரபுசாலமன் இயக்கி வரும் கும்கி-2 படத்தில் சின்ன வயது கதாநாயகியாக நடித்திருக்கிறாராம். மேலும், நயன்தாரா, திரிஷா ஆகியோரின் மகளாக நடித்துள்ள இரண்டு படங்களிலுமே அவர்களுடன் மானஸ்விக்கு செண்டிமென்ட் பாடல் காட்சியு உள்ளதாம். அதனால் இந்த படங்கள் திரைக்கு ...

Read More »