ஸ்மார்ட்போனின் புகைப்படம் சீனாவின் TENAA தளத்தில் கசிந்த புகைப்படம் போன்றே காட்சியளிக்கிறது. பின்புற கமராவின் கீழ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் தெரிவிக்கப்பட்டது.
புதிய எச்.டி.சி. ஸ்மார்ட்போனில் எட்ஜ் சென்ஸ் ஸ்குவீஸ் அம்சம், எச்.டி.சி. பூம்சவுண்டு மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
எச்.டி.சி. யு11 பிளஸ் எதிர்பார்க்கப்படு்ம சிறப்பம்சங்கள்:
– 6.0 இன்ச் 1440×2880 பிக்சல் குவாட் எச்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
– அட்ரினோ 540 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், f/1.7 அப்ரேச்சர்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை ஸ்கேனர்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP68)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3930 / 4000 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0
எச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் வெளியாகும் என்றும் இத்துடன் யு11 லைஃப் எனும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.