Broadband- இணையப் பயன்பாடு தொடர்பில் மக்கள் திருப்தியடைகிறார்களா என உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அவுஸ்ரேலியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
Ipsos Global Advisor என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சுமார் 28 நாடுகளைச் சேர்ந்த 21 ஆயிரம் பேரிடம், அவர்கள் பயன்படுத்தும் இணைய சேவை திருப்தியளிக்கிறதா எனக் கேட்கப்பட்டது.
இதில் பங்கேற்ற அவுஸ்ரேலியர்களில் 61 வீதமானவர்கள் தமது இணையத்தொடர்பு திருப்தியளிப்பதாக இல்லை என தெரிவித்துள்ள நிலையில், இக்கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 28 நாடுகளில் அவுஸ்ரேலியா கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தமது இணைய சேவை தொடர்பில் மகிழ்ச்சியடையும் நாடுகளாக சேர்பியா, தென்கொரியா மற்றும் கொலம்பியா ஆகியன காணப்படுகின்றன.
Eelamurasu Australia Online News Portal