பல படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் கொட்டாச்சி. இவரது நான்கு வயது மகள் மானஸ்வி தற்போது சதுரங்கவேட்டை-2, இமைக்கா நொடிகள், கும்கி-2 ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.
இதில், சதுரங்கவேட்டை-2 படத்தில் திரிஷாவின் மகளாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாகவும் நடிக்கும் மானஸ்வி, பிரபுசாலமன் இயக்கி வரும் கும்கி-2 படத்தில் சின்ன வயது கதாநாயகியாக நடித்திருக்கிறாராம். மேலும், நயன்தாரா, திரிஷா ஆகியோரின் மகளாக நடித்துள்ள இரண்டு படங்களிலுமே அவர்களுடன் மானஸ்விக்கு செண்டிமென்ட் பாடல் காட்சியு உள்ளதாம்.
அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் குழந்தை நட்சத்திரமாக விடுவாராம் மானஸ்வி.
அதோடு, கும்கி-2 படத்திற்காக தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டு தற்போது சென்னை திரும்பியிருக்கிறார் மானஸ்வி. அங்கு குட்டி யானையுடன் அவர் நடித்த காட்சிகளை படமாக்கியபோது பிரபுசாலமன் சொல்லிக்கொடுத்தைப்போலவே உள்வாங்கி நடித்து சிங்கிள் டேக்கில் ஓகே பண்ணி அவரிடம் பாராட்டு வாங்கியிருக்கினாராம் மானஸ்வி.
அப்போது அவரது நடிப்பைப்பார்த்த பிரபுசாலமன், எதிர்காலத்தில் பெரிய கதாநாயகியாக வருவதற்கான எல்லா தகுதிகளும் உள்ளது என்று சொல்லி மானஸ்வியை வாழ்த்தினாராம்.