குமரன்

செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ‘தீ கேப்பிட்டல்’ என்னும் தனியார் செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னாபோலிஸ் பகுதியில் ‘தீ கேப்பிட்டல்’ எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் அப்பகுதிக்கு வந்த ஒரு நபர் அலுவலத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் ...

Read More »

“நானும் தமிழ்ப் பெண் என்கிற ஒரு சிறப்பு போதுமே!” – தொகுப்பாளர் மமதி சாரி

அழகுத் தமிழ். தனித்துவ தேன் குரல். புன்னகைச் சிரிப்பு… என்று தனித்துவ அடையாளங்களுடன் மிளிர்பவர், மமதி சாரி. தொலைக்காட்சி தொகுப்பாளராக கலக்கியவர், சின்ன இடைவெளி எடுத்து அமைதியானார். தற்போது, சன் டிவி ‘வாணி ராணி’ சீரியலில் திடீர் வரவாக வந்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இவருடன் உரையாடத் தொடங்கிய சில விநாடிகளிலேயே நமக்கும் தொற்றிக்கொள்கிறது உற்சாகம். “திடீரெனப் பெரிய இடைவெளி ஏற்படக் காரணம் என்ன?” “சன் டிவி ‘செல்லமே செல்லம்’தான் தொகுப்பாளராக என் கடைசி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சி 2015-ம் ஆண்டு முடிஞ்சது. மூணு வருஷமாச்சு. இந்த இடைப்பட்ட ...

Read More »

யாழ் பல்கலையில் திரண்ட மாணவர்கள்-சுழிபுரம் சிறுமிக்கு நீதி கோரி!

சுழிபுரம், பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக முன்றலில் ஆரமம்பித்த இப் போராட்டம் பலாலி வீதிவரை சென்று இரு மருங்கிலும் ஆபர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். காவல்துறை கயவர்களுடனா, காவல் துறையா கஞ்சா துறையா, இன்னும் எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் இப்படி ஆவது? உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

முதல்முறையாக நடைபெறவுள்ள டிரம்ப் – புதின் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு இடையே நடைபெறவிருந்த நீண்டகால பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதிபர் புதின் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பிரஸல்ஸில் நடைபெறவுள்ள நேடோ பேச்சுவார்த்தைக்கு பிறகு புதினுடனான தனது பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபின்லாந்து தலைநகர் எல்சின்கியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிரியாவின் போர் குறித்தும் யுக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படும் ...

Read More »

குடியுரிமை விண்ணப்பத்தொகை மாற்றத்தில் அவுஸ்திரேலிய அரசின் திட்டம் தோற்கடிப்பு!

அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விண்ணப்பத் தொகையில் சலுகையை ரத்துச் செய்யும் அரசின் தீர்மானம் மீளப்பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. புலம்பெயர் பின்னணி கொண்ட முதியவர்கள் மற்றும் சென்டர்லிங்க் கொடுப்பனவு பெறும் முன்னாள் வீரர்கள், கணவனை இழந்தவர்கள் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குடியுரிமை விண்ணப்பத் தொகையில் சலுகைகள் ரத்தாகிறது. சாதாரணமாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் சுமார் 285 டொலர்களை அதற்கான விண்ணப்பத் தொகையாக செலுத்த வேண்டும். மேலும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் கணவனை இழந்த கைம்பெண்கள் வெறுமனே 20 அல்லது 40 டொலர்கள் மட்டுமே ...

Read More »

சந்தியாவிற்கு மரணஅச்சுறுத்தல்- மன்னிப்புச்சபை கவலை!

சந்தியா எக்னலிகொடவிற்கு மரணஅச்சுறுத்தல் விடுப்பவர்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியும் பலவந்தமாக காணாமல்போனவர்களிற்காக குரல்கொடுப்பவருமான சந்தியா சமூக ஊடகங்களில் மரணஅச்சுறுத்தல்களையும்,துன்புறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டுள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சந்தியா எக்னலிகொட எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் கடும்கவலையளிக்கின்றன என தெரிவித்துள்ள மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி  இயக்குநர் தினுசிகா திசநாயக்க அவரிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயல்பவர்களிற்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமை பாதுகாவலர்கள் தங்கள் ...

Read More »

போகுமிடமெல்லாம் தானே வரும் சூட்கேஸ்!

கொஞ்சம் செயற்கை நுண்ணறிவு, சக்திவாய்ந்த சில்லு, இரண்டு மோட்டார் சக்கரங்கள். இவற்றையெல்லாம் சேர்த்தால் கிடைப்பதுதான், ‘ஓவிஸ்’ சீனாவைச் சேர்ந்த, பார்வர்டு எக்ஸ் ரோபாடிக்ஸ் தயாரித்துள்ள ஓவிஸ், ஒரு புத்திசாலி சூட்கேஸ்! அது தன் உரிமையாளரை அடையாளம் கண்டுகொள்ளும் கேமிரா வசதியுடன் இருப்பதால், வேறு யாரும் அதை ‘கையாள’ முடியாது. உரிமையாளர் எங்கு சென்றாலும், அவரது வலது பக்கமாக கூடவே வரும் விசுவாசம் கொண்டது ஓவிஸ். படிகள், தடைகள் வந்தாலோ, பேட்டரி தீர்ந்து போனாலோ, உரிமையாளர் அதன் கைப்பிடியை பிடித்து இழுத்துச் செல்லலாம். ஓவிஸ் தானாக ...

Read More »

மரணம் எங்கே தொடங்குகிறது?

இதயம், மூளையின் துடிப்பு ஆகியவற்றைச் சார்ந்தே உயிரின் லயம் உள்ளது. இந்த முடிவை மருத்துவத் துறையோடு இணைந்து இலக்கியம், கவிதை, தத்துவம் போன்றவை அங்கீகரிக்கின்றன. மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை எந்த உடல் உறுப்பின் செயல் இழப்பிலிருந்து முடிவு செய்யலாம் என்பதையும் மருத்துவ அறிவியல்தான் கேட்கிறது. உடலுறுப்பு மாற்று சிகிச்சைகளின் நடைமுறைகள் வெளிப்படையாக இருக்கும் பொருட்டு, மூளைச் சாவு நிகழ்வுகளை உறுதிப்படுத்தும் விதிமுறைகளைக் கடந்த மாதம் கேரள அரசு வெளியிட்டது. மருத்துவ அறிவியலில் ஏகப்பட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் (ஒருவேளை அதுவே காரணமாகவும் இருக்கலாம்) மருத்துவ ரீதியாகவும் ...

Read More »

பிரபாகரன் ஓர் அதிசயப் பிறவி! -ஆனந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தியுடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த நேர்காணல் இதோ, லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்து விட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னைத் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள். அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு ...

Read More »

அன்பின் முன்னால் அந்தஸ்து எனக்கு பெரிதாக தெரியவில்லை!

ஜப்பான் நாட்டு இளவரசி சாதாரண குடிமகனை திருமணம் செய்ய இருப்பதால் அரசு குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார். ஜப்பான் மன்னர் அகி ஹிட்டோவின் மூத்த பேத்தி இளவரசி மாகோ (25). இவர் டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த கீ கொமுரோ என்ற வாலிபரை காதலித்தார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த கீ கொமுரோ சட்ட அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய விரும்பினர். அதற்கு இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடந்தது. இவர்கள் இருவருக்கும் வருகிற ...

Read More »