ஆஸ்திரேலிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களின் செயல்பாடு குறித்து கவலைத் தெரிவித்துள்ள சீனா, அம்முகாம்களை உடனடியாக மூடக்கோரி வலியுறுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு சீன நிறுவனமான ஹூவாயின் 5G தொலைத்தொடர்பை சேவையை வெளிப்படையாக ஆஸ்திரேலிய அரசு தடைசெய்ததை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் சீனா இடையிலான உறவில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா கிருமித்தொற்றின் மூலத்தைக் குறித்து அறிய விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலிய வலியுறுத்தியதும் ஆஸ்திரேலியா- சீனா உறவைப் பாதித்தாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், ...
Read More »குமரன்
மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்
மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுடனான கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் சந்திப்பு பற்றி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வேளையில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது, மாகாண சபைத் தேர்தல் உடனடியாக ...
Read More »மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெற்றுவரும் இக்காலப்பகுதியில் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்தேறிய இனவழிப்புக்கு நீதி கோரி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் ...
Read More »அடக்கு முறைகளுக்கு அஞ்சாது மக்கள் எழுச்சி பெற வேண்டும்
இலங்கையில் தமிழ்பேசும் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள், வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் நடைபெற்று 20தினங்களை கடந்துள்ள நிலையில், அது தொடர்பிலான பல்வேறு சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டமானது பல்வேறு இடறுபாடுகள், அடக்குமுறைகளை மீறி நடைபெற்றதானது தெற்கிலும், சர்வதேசத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உரக்கச்சொல்லியிருக்கின்றதே உண்மையான விடயமாகும். சிங்களப் பேரினவாத சக்திகள் இந்த பொத்துவில் ...
Read More »சிறப்பான நாளை கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமான்… குவியும் வாழ்த்துகள்
முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் முக்கியமான நாளான இன்று ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவியுடன் திருமண நாளை இன்று கொண்டாடி வருகிறார். இது இவர்களின் 25வது திருமண நாள். இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு, மனைவியுடன் தான் ...
Read More »நிறவெறி குற்றச்சாட்டுக்கு இளவரசர் வில்லியம் மறுப்பு
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான ஹாரியும், அவரது மனைவி மேகனும், அரச குடும்பத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறினர். இதற்கான காரணத்தை வெளியிடாமல் மவுனம் சாதித்து வந்த அவர்கள், சமிபத்தில் பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரேயின் நிகழ்ச்சியில் அதை வெளியிட்டனர். குறிப்பாக இங்கிலாந்து அரச குடும்பத்தில் மேகன் அனுபவித்த சவால்களை அவர்கள் வெளிப்படுத்தினர். அதாவது, திருமணமான புதிதில் அரச குடும்பத்தில் தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், இதனால் மன அழுத்தம் அதிகரித்து தற்கொலை எண்ணம் கூட ஏற்பட்டதாக மேகன் அதிர்ச்சி குற்றச்சாட்டை ...
Read More »இறுதி அறிக்கையின் மேலும் 22 பகுதிகள் கையளிப்பு
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின், மேலும் 22 பகுதிகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் சட்டப் பிரிவு பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீரவினால் அறிக்கையின் பாகங்கள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 87 பாகங்களைக் கொண்டதாகும். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பாகங்கள் கடந்த 2 ஆம் திகதி சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
Read More »புதிய வகை வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம்
தென்னாபிரிக்காவில் பரவும் கொரோனா தொற்றின் E484K என்கிற புதிய வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த வகையிலான வைரஸ் தற்சமயம் தென்னாபிரிக்க நாட்டில் பரவிவருகின்றதாக கூறப்படுகின்றது. குறித்த நபர் தன்சானியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Read More »ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடி நாளை ஆலோசனை
குவாட் கூட்டணி உச்சி மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் இம்மாநாடு நடக்கிறது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2004-ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2007-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது. வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலேயே இதுவரை பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்தநிலையில், முதல்முறையாக தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘குவாட்’ கூட்டணி உச்சி மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் ...
Read More »மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் விஜய்சேதுபதியின் ரீல் மகள்
விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற உப்பென்னா திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. தெலுங்கில் காதலர் தினத்தன்று வெளியான படம் உப்பென்னா. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்திருந்த இப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். அவரின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய ...
Read More »
Eelamurasu Australia Online News Portal