முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் முக்கியமான நாளான இன்று ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவியுடன் திருமண நாளை இன்று கொண்டாடி வருகிறார். இது இவர்களின் 25வது திருமண நாள். இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு, மனைவியுடன் தான் இருக்கும் அழகியப் படத்தை வெளியிட்டு அதில் ’25 + 1’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சைரா பானு ஆகியோருக்கு கதீஜா ரகுமான், ரஹிமா ரகுமான் மற்றும் அமீன் ரகுமான் ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.
Eelamurasu Australia Online News Portal