குமரன்

போலி செய்திகளை முடக்க புதிய திட்டத்தை துவக்கிய வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய திட்டத்தை துவங்கியிருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் (Share Joy, Not Rumours) எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை மிகவும் கவனமாக பயன்படுத்துவது பற்றி கற்பிக்க இருக்கிறது. முன்னதாக தொலைகாட்சி, அச்சு ஊடகம் மற்றும் வானொலி விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக இந்தியா முழுக்க பல லட்சம் ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவர்களுக்கு பாலியல் கொடுமையா?

ஆசிய நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க செல்லும் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2015 அல்லது 2016 ஆம் ஆண்டுகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களில் 25 சதவிகிதம் பேர் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியிலும், 51 சதவிகித மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கு காரணமான நபர்கள் குறித்து தெரிந்தும் அதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள் என மனித உரிமை ஆணையம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 39 பல்கலைக்கழகங்களில் உள்ள ...

Read More »

மின்தடை பற்றிய முக்கிய அறிவிப்பு !

நாளாந்தம் காலை மற்றும் மாலை வேளைகளில் இரு கட்டங்களாக நான்கு  மணித்தியாலங்களுக்கு  நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் முதல் கட்டமாக காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை அல்லது   முற்பகல் 11.30 மணி முதல்  பிற்பகல் 2.30 மணி வரை அல்லது பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான 3 மணித்தியாலங்கள் பிரதேச அடிப்படையில் மின்சார தடை அமுல் செய்யப்படவுள்ளது. அத்துடன் அதே போல் நாளாந்தம் இரண்டாம் கட்டமாக ...

Read More »

இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயதுடைய சிறுவன் சிகிச்சையின் போது, இரத்தம் மாற்றி ஏற்றியதால் கடந்த 19 திகதி  உயிரிழந்ததாக பெற்றோரால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியான விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி  கே. கணேசலிங்கம் தெரிவித்தார். இதுபற்றி சிறுவனின் பெற்றோர் மேலும் தெரிக்கையில், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயது சிறுவனொருவன் கடந்த 1.3.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  வாகன விபத்தின் போது சிறிய காயங்களுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...

Read More »

குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது – பெனாசிர் மகன்

இந்தியாவின் குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது என்று பெனாசிர் மகன் குற்றம் சாட்டியுள்ளார். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக இந்திய ...

Read More »

“எனக்குச் சவால் என்றால் ரொம்பப் பிடிக்கும்” – சமந்தா

“எனக்குச் சவால் என்றால் ரொம்பப் பிடிக்கும்” எனும் சமந்தா, ‘சீமராஜா’ படத்துக்காகச் சிலம்பம் சுழற்றினார். ஆனால் “ எனக்கு உண்மையாகவே சவாலாக அமைந்தது எது என்று கேட்டால், அது வேம்பு கதாபாத்திரம்தான்” என்று விரைவில் வெளியாகவிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தாம் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பற்றிப் பேசத் தொடங்கினார். விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க, ’ஆரண்யகாண்டம்’ தியாகராஜன் குமாரராஜா இயக்கம் என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்றில்லாமல் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த சமந்தா உடனான உரையாடலின் ஒரு பகுதி இது… வேம்பு கதாபாத்திரத்தை ...

Read More »

வாழ்வை வென்ற நிமால்!

நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு! வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள், இருள் சூழ்ந்த சிறுஅறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலூடாகப்  பிரவேசிக்கும் சூரிய ஒளியில், அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி, அவரின் முகத்தில் பட்டுத் தெறிக்கையில், அந்த அறையெங்கும் வௌிச்சம் பரவுகின்றது. அவர்தான் நிமால். கட்டிலில் அமர்ந்தபடி, அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களை வகை, வகையாகப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கிறார். கட்டிலெங்கும் கடிதக் கட்டுகள் குவிந்துகிடக்கின்றன. கடிதம் எழுதியிருப்பவர்கள் அனைவரும், இனிவரும் தலைமுறையினருக்கு உரியவர்கள். இப்போது பாடசாலைக் கல்வியின் ருசியைச் சுவைத்துக் ...

Read More »

ஜெனீவாவில் தமிழர்கள்!

ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனிவா விலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது? கடந்த எட்டு ஆண்டுகளாக என்ன கிடைத்ததோ அதன் தொடர்ச்சிதான் இம்முறையும் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் வைகுந்தவாசனில் தொடக்கி கஜேந்திரகுமார் வரையிலுமான பல தசாப்த கால அரசியலில் ஐ.நா. அல்லது ஜெனிவா எனப்படுவது ஒரு மாயையா? அல்லது விடியுமாமளவும் விளக்கனைய மாயையா ? இக்கேள்விக்கு விடை காண்பதென்றால் அதை மூன்று ...

Read More »

அவுஸ்ரேலிய முப்படைகள் கப்பல்கள் சிறிலங்காவில்!

அவுஸ்ரேலியாவின் முப்படைகள் , கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் இலங்கை சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தின் கடலோர பாதுகாப்பு தொடர்பில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு அவுஸ்ரேலிய முப்படைகள் சிறிலங்கா சென்றுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் சிறிலங்கா முப்படைகள் ஒன்றிணைந்து அனர்த்த முகாமைத்துவம். கடற்பிராந்திய தந்திரோபாயம் மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதுடன் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான எச்.எம்.ஏ.எஸ். கன்பரா மற்றும் எச்.எம்.ஏ.எஸ். நியூகேஸ்லி ஆகிய கப்பல்கள் நேற்றைய ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த பாதிரியார்……!

  அவுஸ்திரேலியாவில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சில வாரங்களில் பாதிரியார் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். மேற்கு அவுஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் ஜோசப் ட்ரான் (49). இவர் பெர்த் நகரத்தில் உள்ள பல பள்ளிகளில் பணிபுரிந்திருக்கிறார். அர்மாடாலின் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் 15 வருடங்கள் பணிபுரிந்தவர் சமீபத்தில் தான் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது 13 வயதடைந்திருக்கும் ஒரு சிறுமியை பல வருடங்கள் அவர் பாலியல் ...

Read More »