அவுஸ்திரேலியாவில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சில வாரங்களில் பாதிரியார் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
மேற்கு அவுஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் ஜோசப் ட்ரான் (49). இவர் பெர்த் நகரத்தில் உள்ள பல பள்ளிகளில் பணிபுரிந்திருக்கிறார்.
அர்மாடாலின் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் 15 வருடங்கள் பணிபுரிந்தவர் சமீபத்தில் தான் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது 13 வயதடைந்திருக்கும் ஒரு சிறுமியை பல வருடங்கள் அவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றசாட்டு எழுந்தது.
இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முழு பாதுகாப்பும் வழங்கப்படும் என பெர்த் கத்தோலிக்க பேராயர் தீமோத்தேயு காஸ்டெல்லோ தெரிவித்திருந்தார்.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் பாதிரியார் மீதான குற்றசாட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட பாதிரியார் ஜோசப் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக பேராயர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது பெரும் அதிர்ச்சிதரும் ஒரு துயர செய்தி என குறிப்பிட்டுள்ள அவர், பாதிரியார் தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.