மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 9 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை இலங்கையின் தென் கடற் பிரதேசத்தில் வைத்து, 100 கிலோ கிராமுக்கு அதிகமானப் போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, காவல் துறை விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார். காவல் துறை விசேடப் படையணினியின் இந்த நடவடிக்கைக்கு, கடற்படையினரிதும் ஒத்துழைப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது கப்பலிலிருந்து 50 கிலோகிராமுக்கும் அதிகமாக போதைப் பொருள் ...
Read More »குமரன்
ஆசியாவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியல் – இந்துஜா குடும்பத்துக்கு முதலிடம்!
25.2 கோடி பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகளுடன் பிரிட்டனில் வாழும் ஆசியாவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இந்துஜா குடும்பம் ஆறாவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. லண்டன் நகரில் நடைபெற்ற ‘ஏசியன் பிசினஸ் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியில் பிரிட்டனில் வாழும் ஆசியா கண்டத்தின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலை பிரிட்டன் நாட்டுக்கான இந்தியாவின் உயர் தூதர் ருச்சி கனஷியாம் வெளியிட்டார். 7 புதிய வரவுகள் உள்பட 101 பெரும் செல்வந்தர்களின் பெயர்களை கொண்ட இந்த பட்டியலில் கடந்த ஆண்டை விட சுமார் 300 கோடி பவுண்டுகள் அதிக ...
Read More »கீர்த்தி சுரேஷூக்கு இரட்டை வேடம்!
முதல் இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ், தன் முதல் இந்தி படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது புதிய தகவல். கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வசூலைக் குவித்த பாலிவுட் படமான ‘பதாய் ஹோ’வின் இயக்குநர் அமித் ஷர்மா இயக்கும் இந்த படத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் ...
Read More »வானிலை காரணமாக மின்சார விநியோகத் தடை!
பல்வேறு மின்சார உற்பத்தி நிலையங்களில் திடீரென ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு மற்றும் வெப்பமான வானிலை காரணமாக மின்சார விநியோகத் தடை ஏற்படுத்த நேரிடும் என மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், குறித்த நிலையானது எதிர்வரும் சில நாட்களுக்குள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மின்சார உறபத்தி நிலையங்களின் செயழிலப்பு மற்றும் வெப்பமான வானிலை என்பனவற்றின் காரணமாக, மின்சார விநியோகத்திற்கு கேள்வி 15 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குறித்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு இன்னும் 10 நாட்கள் ...
Read More »புதிய ஜெனிவா பிரேரணை ஊடாக மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா?
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மன் உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்படவிருக்கிறது. ஏற்கனவே இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதன் பிரகாரம் பிரேரணைக்கு அனுசரணை வழங்கும் பட்சத்தில் இலங்கை தொடர்பான 40/1 என்ற இந்தப் புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும். ஒருவேளை ஏதாவது ஒரு உறுப்புநாடு எதிர்ப்பு தெரிவித்தால் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டிய தேவை மனித உரிமை பேரவைக்கு ஏற்படும். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்படாவிடின் ஐ.நா. மனித உரிமை ...
Read More »யுத்தத்தின் போது அக்கறை காட்டாத மனித உரிமை அமைப்புக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தலையீடு செய்வது ஏன்?
நாட்டில் மூன்று தசாப்தகாலமாக யுத்தம் நிலவிய போது எவ்வித அக்கறையும் காட்டாத மனித உரிமை அமைப்புக்கள் தற்போது யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவ் மக்கள் சுமுகமானதொரு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்ற போது தேவையின்றி ஏன் தலையீடு செய்கின்றன,இது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு என்றே கருதவேண்டியுள்ளது. எனவே அரசாங்கத்திற்கு முதுகெலும்பு உண்டெனின் ஸ்திரமான தீர்மானமொன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள்சபை மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். ...
Read More »அவுஸ்திரேலியாவில் சிறுமிக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்றினை பரப்பிய நபர்!
16 வயது சிறுமிக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்றினை பரப்பிய நபர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் பாலியல் உறவின் மூலம் எச்.ஐ.வி நோய்த்தொற்றினை குறித்த நபர் பரப்பியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த 37 வயதான நூர் பஞ்ச்ஷிரி என்பவரே இந்த காரியத்தை செய்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் 16 வயதுடைய சிறுமி மற்றும் அவருடைய 14 வயது தோழியுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த 16 வயது சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் உறவு வைத்துள்ளார். ...
Read More »திருகோணமலையில் உயிரிழந்த அவுஸ்திரேலியர்!
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புராமலை தீவு பகுதியில் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த வயோதிபரொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா – சிட்னி நகரைச் சேர்ந்த ஜோன் ஹோல்டர் (70 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த அவுஸ்திரேலியர் குச்சவெளி பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்தவேளை புராமலை தீவு பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளதாகவும் அதே நேரத்தில் நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி ...
Read More »நியூசிலாந்து தாக்குதலில் உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர் திருமணம்!
நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது, உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்களுள் ஒருவருக்கு கடந்த வியாழன் அன்று திருமணம் நடந்தது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15-ம் தேதி தொழுகை நடைபெற்றபோது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்தபோது, அந்த மசூதிக்கு வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் சென்றனர். உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், கிரிக்கெட் வீரர்களை அதிகாரிகள் அவசரமாக வெளியே அழைத்து வந்தனர். வேகவேகமாக அருகில் இருந்த ...
Read More »ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க எதிர்ப்பு!
ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக உருவாக்கி வருகிறார். விஜய் இயக்கும் படமான ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அவரது ...
Read More »
Eelamurasu Australia Online News Portal