குமரன்

சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்!

பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `மெர்சல்’ படத்தில் இடம்பெற்றிருந்த `ஆளப்போறான் தமிழன்’ பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான `மெர்சல்’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கு சமூக வலைதளங்களில் ஏகோபத்திய வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. யூடியூப்பில் இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியிருக்கிறது. ...

Read More »

என்னால் மரணத்தின் வாசனையை உணரமுடியும்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏரி கேலா எனும் பெண் உளவியலாளர், தன்னிடம் ஒரு வித்தியாசமான சக்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 24 வயதே ஆன இவர் தற்போது உளவியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் கூறும் போது தன்னால் ஒருவருக்கு மரணம் நிகழப்போகிறது என்பதை, முன்கூட்டியே கணிக்க முடியும் என கூறுகிறார். அவரது கணிப்பு பலமுறை அப்படியே நடந்திருக்கிறது எனவும் தெரிவித்திருக்கும் கேலா, முதல் முறையாக இந்த விஷயத்தை கண்டுவிடித்தது, தனது 12வது வயதில் தானாம். நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்ற கேலா ...

Read More »

மாரடைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உணவு!

எனக்கு 63 வயதாகிறது. 2011-ல் எனக்கு மாரடைப்பு வந்தது. மூன்று அடைப்புகள் இருந்தன. இரண்டு ஸ்டென்டுகள் வைக்கப்பட்டன. பீட்டாலாக், நெக்சியம், டுனாக்ட் இஇசட் எனும் மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். இதுவரை பிரச்சினை எதுவும் இல்லை. உணவு முறையில் மட்டும் அவ்வப்போது சில சந்தேகங்கள் எழுகின்றன. மாரடைப்புக்குப் பிறகான உணவு முறையைத் தெளிவுபடுத்தினால், என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். – எஸ். பாலகிருஷ்ணன், பள்ளிக்கரணை, சென்னை. மாரடைப்பைத் தடுப்பதற்கு உதவும் உணவு வகைகளைத்தான் பெரும்பாலும் மாரடைப்பு வந்தவருக்கும் பரிந்துரை செய்வது வழக்கம். என்ன, மாரடைப்பு வருமுன்னர் ...

Read More »

நான் யாரையும் காயப்படுத்தாததால் இரவில் நிம்மதியாக தூங்குகிறேன்! – சோனம் கபூர்

இந்தி திரை உலக வாரிசு நட்சத்திரங்களில் பிரபலமானவர், சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபூரின் புதல்வியான சோனம், வாரிசு என்பதாக அல்லாமல், தனது சொந்தத் திறமையால் நற்பெயர் பெற்றிருக்கிறார். இந்தித் திரையுலகம் உங்களை எப்படி கவர்ந்தது? நான் கலகலப்பாக பேசக்கூடியவள் அல்ல. படிப்பில் கவனம் செலுத்தவும், பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கவுமே நான் விரும்பினேன். நூலகத்தில் இருக்கவும், வகுப்பறையில் இருக்கவுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆக, நான் வாழ்நாளெல்லாம் படித்துக்கொண்டே இருக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் எனக்குள்ளே இன்னொருபுறத்தில், ஏதாவது ஒரு கலை ...

Read More »

இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிக்கு தன்னார்வ தொண்டு நிறுவன பெண் மருத்துவர் பலி!

இஸ்ரேல் பாலத்தீன எல்லையில் நடந்துவரும் மோதலின் போது இஸ்ரேல் ராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவ உதவி வழங்கச சென்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 21 வயதான பெண் தன்னார்வலரான ரஸன் அல்-நஜார் (Razan al-Najjar, ) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தநிலையில் யுத்தம் நடைபெறும் பகுதியில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More »

ஜூன் 03: அவுஸ்திரேலியாவில் மாபோ நாள்!

மாபோ எதிர் குயின்ஸ்லாந்து (Mabo v Queensland) என்பது அவுஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்புக் கூறப்பட்ட புகழ் பெற்ற ஒரு வழக்காகும். 1992, ஜூன் 3 ஆம் நாள் தீர்ப்புக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  1788 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்து வந்த terra nullius (வெற்று நிலம் எவருக்கும் சொந்தமில்லாத நிலம்) என்ற கொள்கை இல்லாமல் செய்யப்பட்டது. தலைமுறைகளாக நிலம் வைத்திருந்த அவுஸ்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. இவ்வழக்கு முதன் முதலில் டொரெஸ் நீரிணையின் மறி ...

Read More »

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜி.எல் பீரிஸ்!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கட்சியின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ச குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பனிப்போரை அடுத்தே மகிந்த ராஜபக்ச இந்த முடிவை எடுத்துள்ளார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு ராஜபக்ச குடும்பத்துக்குள் கோத்தாபய பசில் ராஜபக்ச சமல் ராஜபக்ச ஆகியோர் தமது ஆதரவாளர்களின் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ...

Read More »

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும்! – கலாநிதி தீபிகா உடகம

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமையானது புலம்பெயர்ந்தோர் அமைப்பினரின் தேவையின் பொருட்டே என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்திருந்தார். குறித்த சட்டமூலத்தின் மூலம் மனித உரிமைகள் கடந்த காலத்தில் மீறப்பட்டுள்ளன.எனவே, மனித உரிமைகளுக்கு சாதகமான முறையில் அரச பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சர்வதேச மனித உரிமைகள் ...

Read More »

தருமு சிவராம்: காலம் நமக்கு அருளிய கொடை!

கேரளாவில் 1975-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடந்த ஒரு அகில இந்தியக் கவிதைப் பட்டறையில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பும் வழியில்தான் முதன்முறையாக சிவராம் மதுரை வந்தார். அவரை ரயில் நிலையத்தில் சந்தித்து, அழைத்துச்சென்று குமாரசாமியின் பெரியநாயகி அச்சகம் மாடி அறையில் தங்கவைத்தேன். அவ்வப்போது பல்கலைக்கழகம் போய் வந்துகொண்டிருந்ததைத் தவிர பிற நேரங்களில் முடிந்தவரை அவருடன்தான் இருந்தேன். மேதமையில் மிளிரும் உடல்மொழியும் பேச்சுமொழியும் கொண்டவர். எடுத்த எடுப்பிலேயே ஒருமையில்தான் உறவாடினார். சுந்தர ராமசாமியை உத்வேகத்தின் உள்ளார்ந்த அமைதி என்று கொண்டால், தருமு சிவராமை உத்வேகத்தின் எக்காளம் என்று ...

Read More »

மூன்று ‘உ’க்களைக் கடைப்பிடித்தால் 100 வருடம் குறையின்றி மகிழ்ச்சியுடன் வாழலாம்!

டாக்டர் சொக்கலிங்கம் தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குச் சிகிச்சையளித்தவர். 50 ஆண்டுகளாக இதய அறுவைசிகிச்சைத் துறையில் சாதனை படைத்துவருபவர். அவரிடம் மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினோம்… “ `வாழ்க்கை என்பது ஒரு மலர்ப் படுக்கை அல்ல’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், அது ஒரு முள் படுக்கையும் கிடையாது. அந்தப் பாதையில் முள்ளும் மலரும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். ...

Read More »