குமரன்

திட்டமிட்டு பறி போகும் முல்­லைத்­தீவு!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்து, கோம்பா சந்தி வரை­யான சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பிர­தே­சத்தை தொல்­பொ ருள் திணைக்­க­ளம் கைய­கப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது என்று அந்­தப் பகுதி மக்­கள் கூறு­கின்­றனர். தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­துக்கு என்று அடை­யா­ளப்­ப­டுத்­தும் நடு­கல் அங்கு நேற்று முன்­தி­னம் நடப்­பட்­டுள்­ளது என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் அத்­து­மீறி தொழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வாடி அமைத்து காணி­களை அப­க­ரிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். ஒரு­பு­றத்­தில் மகா­வலி எல் வல­யம் என்ற பெய­ரில் தமிழ் மக்­க­ளின் ...

Read More »

ஆஸ்திரேலியா – இந்தோனேசிய படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கை!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே உள்ள திமோர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடிப்பு, மற்றும பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் ஆட்கடத்தல் உள்ளிட்ட செயல்களைக் கண்காணிக்கும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கையில ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய எல்லைப் படை, இந்தோனேசிய கடலோர காவல்படை, இந்தோனேசிய கடல் மற்றும் மீன்பிடி விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் உள்ளடங்கிய முத்தரப்பு ரோந்து நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகின்றது. ஆப்ரேஷன் கன்னெட் (Operation Gannet) என அழைக்கப்படும் இந்நடவடிக்கையில் ரோந்து படகுகள்/ கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதே ...

Read More »

சினிமாவும் அரசியலும் வேறு வேறுதான்! -கிருத்திகா உதயநிதி

‘என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமாவும் அரசியலும் வேறு வேறுதான்’ எனத் தெரிவித்துள்ளார் கிருத்திகா உதயநிதி. ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அவருடைய இரண்டாவது படம் ‘காளி’ சமீபத்தில் வெளியானது. இயக்குநராக இருந்தாலும், திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளமும் அவருக்கு இருக்கிறது. அவருடைய கணவரான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர், ஹீரோவாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் மேடைகளில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். ‘அரசியலில் எந்த அளவுக்கு உங்கள் கணவருக்கு உதவியாக இருப்பீர்கள்?’ என்று கிருத்திகாவிடம் கேட்ட போது  “நான் அவருக்குச் செய்யும் ...

Read More »

ஆனந்த சுதாகரனின் மனைவியை கொன்றது அரச பயங்கரவாதமே!

பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார். அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலை கழகத்தில் நேற்று  வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலை முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் குற்றங்களுக்காக கைது செய்யப்படவில்லை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ...

Read More »

ஒருவரின் மரணத்திற்கு பின்னரும் பிரியாத கார்!

பல ஆண்டுகளாக தான் பயன்படுத்திய காரை மரணத்திற்கு பின்னரும் தான் பிரியக்கூடாது என விருப்பப்பட்ட நபரின் ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றி வைத்துள்ளனர். சீனாவின் ஹெபேய் மாகாணத்தை சேர்ந்தவர் குய். பல ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த காரை தன்னுடைய உயிருக்கும் மேலாக நேசித்த இவர், மரணத்திற்கு பின்னரும் தன்னுடைய கார் பிரியவே கூடாது என தனது குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை குய் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். குய்-யின் விருப்பத்தின் படி, அவரது குடும்பத்தினர் சடலத்தை காரில் வைத்து பெரிய ...

Read More »

‘தேசபக்த’ மராட்டியர்களும் ‘தேசவிரோத’ தமிழர்களும்!

எத்தனை கோயில்களுக்குப் போனாலும், எவ்வளவு பரிகாரம் செய்தாலும் தூத்துக்குடி பாவத்தை எடப்பாடி பழனிசாமியால் துடைக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோருக்கும் தான் இது. மே 22-ம் நாள் தமிழ்நாட்டுக்குக் கண்ணீர் நாளாகவே இருந்து தொலையட்டும். ஆனால், உங்கள் வாழ்க்கையில் கறுப்புநாள். இந்தச் சாவுப்பூதம் இறுதிவரை உங்களை நிம்மதியாக இருக்க விடாது. அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகளை நீங்கள் ...

Read More »

5வது நாளாகவும் தொடரும் அகழவுப் பணி!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள லங்கா சத்தொச நிறுவன வளாகத்தில் மனித எச்சங்களை தேடி மேற்கொள்ளப்படும் அகழவுப் பணிகள் 5வது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜாவின் முன்னிலையில் இந்த பணிகள் இன்றும் இடம்பெற்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான அகழ்வு பணிகள் மாலை 5 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை மனித எலும்புகள், பற்கள்,தடையப்பொருட்களான பொலித்தீன் பக்கற்,போத்தல் மூடி உள்ளிட்ட சில தடையப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Read More »

சிறிலங்காவிற்கு பெருமளவான முதலீடுகளை வழங்கியுள்ள சீனா!

சீனாவின் ‘கடன்வலை ராஜதந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் முதலீட்டு வேலைத்திட்டங்களை மையப்படுத்தி, அமெரிக்காவின் சட்டவாக்குனர்கள் சிறிலங்கா விஜயத்தை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான பெருமளவான முதலீடுகளை சீனா வழங்கியுள்ளது. எனினும் இதன் மூலம் சிறிலங்காவின் தமது கடன்பொறியில் சிக்கவைக்கும் ராஜதந்திரத்தை சீனா கையாள்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்துகின்றது. இந்த நிலையில் சிறிலங்காவின்  களநிலவரங்களை ஆய்வு நோக்கில் அமெரிக்காவின் அதிகாரமிக்க சட்டவாக்குனர்கள் குழு ஒன்று சிறிலங்கா வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களை சந்தித்து ...

Read More »

ராஸி – விமர்சனம்

1970களில் நடக்கின்ற கதை. கல்லூரி இளம் மாணவி அலியா பட், கவலை என்பதையே அறியாத ஒரு சந்தோஷப் பறவை. திடீரென்று ஒருநாள் அவருடை 1970களில் நடக்கின்ற கதை. கல்லூரி இளம் மாணவி அலியா பட், கவலை என்பதையே அறியாத ஒரு சந்தோஷப் பறவை. திடீரென்று ஒருநாள் அவருடைய வாழ்க்கையே திசை மாறுகிறது. இந்தியப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் அவரது அப்பா ரஜித் கபூர், பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரர் விக்கி கவுஷலுக்கு அலியாவை திருமணம் செய்து வைக்கிறார். விக்கியின் அப்பாவும், ரஜித் கபூரும் பிரிவினைக்கு ...

Read More »

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுவர்களுக்கு கத்தோலிக்க தேவாலயம் நட்டஈடு!

அவுஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுவர்களுக்கு கத்தோலிக்க தேவாலயம் நட்டஈடு வழங்க உள்ளது. சிறுவர் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கும் தேசிய பொறிமுறைமையில் கத்தோலிக்க தேவாலயங்களும் இணைந்து கொண்டுள்ள நிலையில் இவ்வாறு நட்டஈடு வழங்க உள்ளது. கத்தோலிக்க தேவாலயங்களில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் குறித்து ஐந்து ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. 1950ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் அவுஸ்திரேலியாவின் 7 வீதமான கத்தோலிக்க மதகுருமார் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  பாதிக்கபட்டோருக்கு ...

Read More »