குமரன்

சினிமாவில் அறிமுகமாகும் அஞ்சலியின் தங்கை ஆரத்யா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அஞ்சலியின் தங்கை ஆரத்யா சினிமாவில் நடிக்க வருகிறார். ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் அஞ்சலி. ‘அங்காடிதெரு’ அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து நடித்து வரும் அஞ்சலி திரை உலகில் தனி இடம் பிடித்து இருக்கிறார். ‘பலூன்’ படத்தில் நடித்துள்ள அவர் ‘பேரன்பு’, ‘காளி’ படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில்,அஞ்சலியின் தங்கை ஆரத்யாவும் நடிகை ஆகிறார். விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகிறார். தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்க ...

Read More »

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 335 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது அவுஸ்ரேலியா

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 335 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கும். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்திய அணியில் குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அக்சார் பட்டேல், உமேஷ் ...

Read More »

யாரையும் பின்பற்றாமல் எனது ஸ்டைலில் நடிப்பேன்: காஜல் அகர்வால்

‘குயின்’ ரீமேக்கில் நடிக்கவிருக்கும் காஜல் அகர்வால் தான் கங்கனா ரணாவத்தை பின்பற்றாமல் தனது ஸ்டைலிலேயே நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான இந்தி படம் ‘குயின்’. வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் தேசிய விருது உள்பட 32 விருதுகளை குவித்தது. ‘குயின்’ படம் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதுதவிர தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் தயாராகிறது. தமிழ், கன்னட படங்களை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதில் கங்கனா ரணாவத் பாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். ...

Read More »

ஐ.ஓ.எஸ். 11 அம்சங்கள்!

ஐ.ஓ.எஸ். 11 நன்மைகள்: சிரி: ஆப்பிள் நிறுவனத்தின் தனிப்பட்ட உதவியாள் சேவையான சிரி பல்வேறு மொழிகளை மொழிபெயர்க்கும் வசதி கொண்டுள்ளது. குறிப்பிட்ட மொழிகளை சரியாக உச்சரிக்கவில்லை என்றாலும் டிஸ்ப்ளேவில் வார்த்தைகளை சரியாக பார்க்க முடியம். லைவ் போட்டோஸ்: புதிய இயங்குதளத்தில் லைவ் போட்டோக்களை எடிட் செய்ய முடியும். இத்துடன் பவுன்ஸ், லூப் மற்றும் பல்வேறு அம்சங்களை சேர்க்க முடியும். இதனால் புகைப்படம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை பார்க்க முடியும். ஆப் ஸ்டோர்: புதிய இயங்குதளத்தில் ஆப் ஸ்டோர் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இம்முறை அதிக மேம்படுத்தக்கூடிய ...

Read More »

அவுஸ்- சிறிலங்கா இடையிலான ஒப்பந்தம் குறித்த யோசனைக்கு அனுமதி!

நாட்டின் எல்லையினூடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பில் சிறிலங்கா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சிறிலங்கா – அவுஸ்திரேலியா இடையில் காணப்படுகின்ற மனித கடத்தல்கள் மற்றும் எல்லை மீறிச்செல்கின்ற ஏனைய குற்றங்களை தடுப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களத்துக்கும் இடையில் கைச்சாத்திடுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ...

Read More »

ஆட்டிறைச்சி விளம்பரத்தில் விநாயகர்: அவுஸ்ரேலியாவில் கண்டனப் பேரணி!

ஆட்டிறைச்சி விளம்பரத்தில் விநாயகர் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் பேரணியொன்று அவுஸ்ரேலியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆட்டிறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்தும் அவுஸ்ரேலிய விளம்பரத்தில், விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு இந்து அமைப்புக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். Meat and Livestock Australia என்ற நிறுவனத்தின் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் புதிய வீடியோ விளம்பரம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த விளம்பரமானது இந்து மதத்தவர்களை அவமதிப்பதாகவும் அவர்களது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் பல அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன. ஆட்டிறைச்சி உண்பதை ஊக்கப்படுத்தும் அவுஸ்திரேலிய ...

Read More »

டுவிட்டரில் இனி 280 எழுத்துக்கள் அடிக்கலாம்!

சான் பிரான்சிஸ்கோ : டுவிட்டரில் கருத்து பதிவிடுவோர் இனி 280 எழுத்துக்கள் வரை அடிக்கலாம் என டுவிட்டர் அறிவித்துள்ளது. இதுவரை 140 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்து பதிவிட முடியும் என்ற வரைமுறை இருந்தது. இந்த கட்டுப்பாட்டை தளர்த்தி, சோதனை அடிப்படையில் 280 எழுத்துக்கள் வரை பதிவிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து டுவிட்டரின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி தனது டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், இது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் பலரிடமும் வரவேற்பை பெறும். கருத்து ...

Read More »

சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை!

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. 2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ...

Read More »

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு ஆதரவான வாக்கெடுப்பு

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டுமா என்பது தொடர்பில் அஞ்சல் வழி கருத்து வாக்கெடுப்பு ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இதற்கான ஆதரவு குறைவடைந்துள்ளதாக, நேற்று (25) வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு ஆதரவாக ‘ஆம்’ என்று வாக்களிப்போம் எனக் கூறியவர்களின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளதாக The Australian வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த மாதம் 63 வீதமாக காணப்பட்ட நிலையில், தற்போது அது 57 ஆகக் குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இதற்கெதிராக ‘இல்லை’ எனத் தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 34 சதவீதமாகக் ...

Read More »

அவுஸ்ரேலியாவை ‘ப்ளூவாஷ்’ செய்ய வேண்டும்: சச்சின்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அவுஸ்ரேலியாவை 5 போட்டியிலும் தோற்கடித்து ‘ப்ளூவாஷ்’ செய்ய வேண்டும் என சச்சின் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியா – அவுஸ்ரேலியாஅணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது. முதன்முறையாக அவுஸ்ரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது கிடையாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விராட் கோலி தலைமையிலான இந்திய ...

Read More »