நாட்டின் எல்லையினூடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பில் சிறிலங்கா
மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சிறிலங்கா – அவுஸ்திரேலியா இடையில் காணப்படுகின்ற மனித கடத்தல்கள் மற்றும் எல்லை மீறிச்செல்கின்ற ஏனைய குற்றங்களை தடுப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களத்துக்கும் இடையில் கைச்சாத்திடுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal