இலக்கியவாதிகள் அனைவருக்குமே எழுதுவதற்கான சூழல் அமைந்துவிடுவதில்லை. விமர்சன உலகின் மௌனம், நிரந்தரமற்ற பணிச்சூழலுக்கு இடையே முக்கியமான படைப்புகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் எஸ்.செந்தில்குமார். நகைத் தொழிலாளிகளின் வரலாறு பேசும் ‘காலகண்டம்’, ஆடு வளர்க்கும் கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையைப் பேசும் ‘மருக்கை’ இரண்டும் இவரது முக்கியமான நாவல்கள். ஸ்பாரோ இலக்கிய அமைப்பு வழங்கும் இந்த ஆண்டுக்கான எழுத்தாளர் விருது எஸ்.செந்தில்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நூற்றாண்டுகால நெடிய தமிழ் இலக்கிய மரபில் புகுந்து வேர் பிடித்திருக்கும் களைகளாகச் சில விஷயங்களை இந்தப் பேட்டியில் கோடிகாட்டுகிறார். அற்புதத்தன்மை கொண்ட கதை வடிவத்தை ...
Read More »குமரன்
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சுப்பர்மட பகுதியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நேற்றைய தினம் ஒழுங்கமைத்து நடத்தியவரின் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , கதவுகளை அடித்து நெருக்கியுள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் சுப்பர்மட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாக இருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு கூடியிருந்த மக்களை கலைந்து செல்லுமாறு தமது துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய ...
Read More »26 சர்வதேச விருதுகளை வென்ற டூ லெட் திரைப்படம்
65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்ற ‘டூலெட்’ திரைப்படம் பல்வேறு விழாக்களில் பங்கேற்று வரும் நிலையில், 26 சர்வதேச விருதுக்களையும் வென்றுள்ளது. 65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது ...
Read More »மிருகங்களின் கொழுப்பிலிருந்து விமான எரிபொருள்!
பெட்ரோல் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மிருகங்களின் கொழுப்பில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 2 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு காற்றில் கலந்து மாசு ஏற்படுகிறது. விமானங்களில் வேறு வகையான எரிபொருள் பயன்படுத்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாட்டின் கெட்டியான கொழுப்பில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் இத்தகைய முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று கோழி கொழுப்பில் இருந்தும் விமானத்துக்கான ...
Read More »பாதயாத்திரைக்கு தயாராகும் ஐ.தே.க!
ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நீதியின் குரல்” என்ற பாதயாத்திரை மூலமாக நாட்டை ஒரே சக்தியாக ஒன்று திரட்டவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. எதிர் வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி குறித்த பாத யாத்திரை கொழும்பிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன, “கொழும்பு நகர சபை வளாகத்திலிருந்து ஆரம்பமாகும் நீதியின் குரல் என்ற மக்கள் பாத யாத்திரை மொரட்டுவை பானந்துரை அளுத்கம அம்பலன்கொட ஹிக்கடுவ காலி மாத்தறை தேவுந்தர மற்றும் ...
Read More »16 லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் எல்.ஜி.
எல்.ஜி. நிறுவனம் 16 கேமரா லென்ஸ் கொண்ட ஸமார்ட்போனினை உருவாக்கி வருவதாக அந்நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்போதைய டிரெண்ட் ஆக இருக்கும் நிலையில், சில நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் மூன்று, நான்கு கேமராக்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் 16 பிரைமரி கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் உருவாக்க இருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நவம்பர் 20, 2018 ...
Read More »ஆஸ்திரேலியாவை வீழ்த்த கோலிக்கு வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும் – கில்கிறிஸ்ட்
ஆஸ்திரேலியாவை வீழ்த்த கோலிக்கு வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணி மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த விராட் கோலி மட்டும் போராடினால் ...
Read More »பாலைவனத்துக்கான பயணமா, பால்நிலவுக்கான பயணமா?
நல்ல உறவு (நல்லுறவு) என்பது மற்றவர்களுடன் ஏற்படுத்திக் கொள்கின்ற கட்டாய ஒப்பந்தம் அல்ல. மாறாக, அது இயல்பாக விரும்பி, மனதில் தோன்ற வேண்டிய ‘புனித உறவு’ ஆகும். ஆனால், 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி வரை, ‘நல்லாட்சி’ என்ற ஒற்றை வார்த்தை, மலிந்து காணப்பட்ட சொல் ஆகும். அவர்கள், வலிந்து ஏற்படுத்திய உறவு என்பதால்தான், நல்லுறவும் நல்லாட்சியும் இன்று வலுவிழந்து விட்டது. இவ்வகையில், இலங்கை அரசியலில், கடந்த ஒரு மாத காலமாகப் பல ‘அசிங்கங்கள்’ அரங்கேறி ...
Read More »சிறைக்கு செல்லவுள்ள முக்கியஸ்தர்கள்!
எதிர் வரும் காலங்களில் வெகு விரைவில் சிறைக்கு செல்லவிருக்கும் அனைவரினதும் பெயர் விபரங்களையும் தம்பர அமில தேரர் வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தம்பர அமில தேரர் விரைவில் சிறைக்கு தண்டனை பெற்று செல்லவிருக்கும் நபர்களின் பெயர் விபரங்களையும் எந்தெந்த குற்றங்களுக்காக சிறைக்கு செல்லவுள்ளார்கள் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாகவே மஹிந்த தரப்பு மைத்திரியோடு இணைந்து ஜனநாயத்திற்கு எதிரான சதி முயற்சியில் இறங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். அந்த வகையில், 1. மூன்றரை கோடி ரூபாய் ஊழல் மோசடி ...
Read More »நீதிமன்றத்தில் அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க தயார்!
பொறுப்பு வாய்ந்த சிரேஸ்ட அதிகாரி என்றவகையில் நான் எந்த குற்றத்தையும் வேண்டுமென்று செய்யவில்லை என தெரிவித்துள்ள முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜயகுணவர்த்தன நீதிமன்றத்தின் முன்னாள் அனைத்து உண்மைகளையும் சொல்வதற்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார் சிஐடியினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகமொன்றிற்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான் எனது பதவிக்காலத்தில் எந்த சட்டவிரோதமான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை வேண்டுமென்றே எந்த தவறையும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக எனக்கு தெரிந்த அனைத்தையும் நீதிமன்றத்தின் முன்னிலையில் தெரிவிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			