ஆஸ்திரேலியாவை வீழ்த்த கோலிக்கு வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இதன் 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணி மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த விராட் கோலி மட்டும் போராடினால் போதாது. சக வீரர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை போன்றே வீராட்கோலி தற்போது 4 டெஸ்டிலும் ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன். இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் கோலியுடன் சேர்ந்து மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட வேண்டும்.
கோலியுடன் மற்ற வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்து, பந்து வீச்சும் நன்றாக அமைந்தால் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்த இயலும்.இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
2014-ம் ஆண்டு 4 டெஸ்ட் போட்டிக்கொண்ட தொடரை டோனி தலைமையிலான அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது.இந்த தொடரில் விராட்கோலி 694 ரன்களை (சராசரி 86.50) குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.