எல்.ஜி. நிறுவனம் 16 கேமரா லென்ஸ் கொண்ட ஸமார்ட்போனினை உருவாக்கி வருவதாக அந்நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்போதைய டிரெண்ட் ஆக இருக்கும் நிலையில், சில நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் மூன்று, நான்கு கேமராக்களை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் 16 பிரைமரி கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் உருவாக்க இருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நவம்பர் 20, 2018 தேதியில் எல்.ஜி. நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பெற்று இருக்கிறது.
16 லென்ஸ்களும் ஸ்மார்ட்போனின் பின்புறம் மேட்ரிக்ஸ் வடிவில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த லென்ஸ்கள் வெவ்வேறு பரிணாமங்களை கொண்டிருக்கும் என்றும் இவற்றில் பயனர்கள் தேர்வு செய்யும் லென்ஸ்கள் மட்டும் பயன்படுத்த முடியும். வெவ்வேறு லென்ஸ்களில் எடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களை ஒன்றிணைத்து அசையும் படமாகவும் மாற்ற முடியும்.
வெவ்வேறு லென்ஸ்களில் எடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தின் ஒரு பகுதியை மற்ற லென்ஸ்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையோ அல்லது புகைப்படத்தின் ஒரு பகுதியை மட்டும் ஒன்றாக இணைக்க முடியும். இதனை பயனர்கள் எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்ய முடியும்.
கேமராக்களின் பின்புறம், கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது, இதனை செல்ஃப்-போர்டிரெயிட் ஃபேஷனாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதே காப்புரிமையில் ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் காப்புரிமை விவரங்களில் தெரியவந்துள்ளது.
எனினும், காப்புரிமை வரைபடங்களில் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. ஸ்மார்ட்போனில் ஸ்பீக்கர் கிரில் பின்புறம் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்பீக்கர் ஸ்மார்ட்போனின் முன்புற ஸ்பீக்கருடன் இணைந்து ஸ்டீரியோ சவுன்ட் வழங்கும்.