சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் பேசிய திரிஷா, இதுவரை காதலை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் திரிஷா. இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் தனது 37 -வது பிறந்த நாளை கொண்டாடிய திரிஷாவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்தே திரிஷா பாடல்களுக்கு டப் மேஷ் செய்து வெளியிடுவது, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது ...
Read More »குமரன்
அவுஸ்திரேலியாவில் 6 இலட்சம் பேர் தொழில்களை இழந்தனர்!
கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் காரணமாக அவுஸ்திரேலியாவில் சுமார் 600,000 பேர் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளதாக அந் நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றின் வீதமானது குறைந்து வருகின்ற போதிலும், நாடு மேலும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கக்கூடும் என்றும் அவர் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவில் 6,989 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 98 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது. அதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளான 6,301 பேர் குணமடைந்துள்ளதாகவும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
Read More »கரோனாவை வென்ற வீராங்கனை ஷைலஜா
ஜனவரி மாதம் 20-ம் தேதி, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, மருத்துவப் பயிற்சி பெற்ற தன் உதவியாளர் ஒருவரை தொலைபேசியில் அழைத்தார். சீனாவில் ஒரு புதிய வைரஸ் அபாயகரமான முறையில் பரவியிருப்பதைப் பற்றிய செய்தியை இணையத்தில் படித்துவிட்டு, “அந்த வைரஸ் இங்கே வருமா” என்று கேட்டார். அந்த உதவியாளர், உறுதியாக இங்கேயும் வரும் மேடம் என்று பதிலளித்தார். இப்படித்தான் ஷைலஜா, கரோனாவை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கினார். நான்கு மாதங்கள் ஆன நிலையில், கோவிட்-19 வைரஸால் 524 பேர் பாதிக்கப்பட்டு நான்கு மரணங்களை மட்டுமே ...
Read More »பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்
கன்னட திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கிய மைக்கேல் மது உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கன்னட திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கியவர் மைக்கேல் மது. இவர் ஆரம்பத்தில் நடன இயக்குனராக இருந்து, பின்னர் சிவாராஜ்குமார் கதாநாயகனாக நடித்த ஓம் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. பட வாய்ப்புகளும் குவிந்தன. அதன் பிறகு ஏகே. 47, நீலாம்பரி, கஜனூரா, சூர்யவம்சா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். 300 படங்களுக்கு ...
Read More »தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!
தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கையில், “மே 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் மனிதகுல வரலாற்றில் கோடான கோடி தமிழர்கள் நெஞ்சில் ரத்தக் கண்ணீரை வடிக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களாகும். தமிழர்களின் பூர்வீகத் தாயகம் இலங்கைத் தீவு. வரலாற்றின் வைகறைக் காலத்திலிருந்து அவர்கள் கொடி உயர்த்திக் கொற்றம் அமைத்துச் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். பிரிட்டிசார் வெளியேறுகிறபோது, அதுவரை தமிழர்களின் நிர்வாகப் ...
Read More »மட்டக்களப்பில் வாள்வெட்டில் ஒருவர் பலி!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15.05.2020) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கல்லடி வேலூர் 4 ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 29 வயதுடைய இராமசந்திரன் மனோரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்தந பர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டில் இருந்துள்ள நிலையில் சுமார் 6.30 மணியளவில் அவருடைய கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்பையடுத்து அவர் அந்த அழைப்புக்கு பதில் அளித்தவாறு வீட்டின் ...
Read More »தீபிகா படுகோனேவுக்கு இணையாக நடனமாடிய சாயிஷா
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு இணையாக தமிழ் நடிகை சாயிஷா நடனமாடி காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஊரடங்கு நேரத்தில் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது தீபிகா படுகோனே நடித்த பாஜிராவ் மஸ்தானி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடிய காணொளி வெளியிட்டுள்ளார். ஒரு ...
Read More »சுமந்திரனுக்கு கவசமானார் சம்பந்தன்!
சிங்கள மொழியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வழங்கியிருக்கும் நேர்காணலில், சுமந்திரன் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடு அந்த நேர்காணில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் எற்படுத்தும் நோக்கத்தோடும் அந்த நேர்காணலில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கும் சுமந்திரன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார் எனவும் கூட்டமைப்பின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...
Read More »விதியை மீறியதாக பாரதிராஜா மீது விசாரணை
தனிமைப்படுத்தும் விதியை இயக்குனர் பாரதிராஜா மீறினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து கடந்த வாரம் தேனிக்கு வந்தார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை சிவப்பு மண்டல பகுதியாக உள்ளது. அங்கிருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இருந்து தேனிக்கு வந்த இயக்குனர் பாரதிராஜாவும் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். சுகாதாரத்துறையினர் வேண்டுகோளை ஏற்று அவரும் தன்னை தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ...
Read More »மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலியா நிறுவனம்
கிரிக்கெட் பேட் தயாரிக்கும் ஆஸ்திரேலியா நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதற்காக மன்னிப்பு கேட்டதால் சச்சின் தெண்டுல்கர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கடந்த 2016-ம் ஆண்டு கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்டனின் பொருட்கள் மற்றும் வீரர்கள் அணியும் ஆடைகளை பிரபலப்படுத்தும் உலகளாவிய பிரத்தியேக ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். 2018 செப்டம்பர் மாதம் 17-ந்தேதிக்குப் பிறகு சச்சின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார். இருந்தாலும் சச்சின் பெயரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தத்தில் கூறியபடி ராயல்டி மற்றும் ஒப்புதல் கட்டணத்தை ...
Read More »
Eelamurasu Australia Online News Portal