அவுஸ்திரேலியாவில் 6 இலட்சம் பேர் தொழில்களை இழந்தனர்!

கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் காரணமாக அவுஸ்திரேலியாவில் சுமார் 600,000 பேர் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளதாக அந் நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றின் வீதமானது குறைந்து வருகின்ற போதிலும், நாடு மேலும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கக்கூடும் என்றும் அவர் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் 6,989 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 98 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது. அதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளான 6,301 பேர் குணமடைந்துள்ளதாகவும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.