குமரன்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு!

கல்குடாவில் எத்தனோல் மதுபான தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் அக்டொபர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். நான்காவது சாட்சியான ஏறாவூர் பொலிஸார் மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்றும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். குறித்த தொழிற்சாலைக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் ...

Read More »

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்!

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை தற்காலிகமாக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த இடமாற்றமானது காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்திரவுக்கமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ருவான் குணசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஷபக்ஷவை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதாக நாலக சில்வாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த 12 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ...

Read More »

சீன பொருட்களுக்கு கூடுதல் வரி! – டிரம்ப்

மேலும் ரூ.14 லட்சம் கோடி சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அது வர்த்தக போராக மாறி உள்ளது. சீனா தனது அறிவுசார் சொத்துக்களை திருடுவதாகவும், தொழில் நுட்பங்களை தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா புகார் கூறுகிறது. சீனா தொடர்ந்து இந்தப் புகாரை மறுத்து வருகிறது. ஆனாலும்கூட, சீனாவால் தங்களுக்கு ஏற்படுகிற வர்த்தக ...

Read More »

அவுஸ்ரேலிய இசைத்திருவிழாவில் இருவர் உயிரிழந்தனர்!

அவுஸ்ரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்டதால் 23 வயதான ஆணும், 21 வயதான பெண்ணும் உயிரிழந்தனர். அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் இசைத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் அந்த இசைத்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் போதை மாத்திரைகளை உட்கொண்டு உற்சாகத்தில் மிதந்தனர். சிலர் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்டதால் சுய நினைவுகளை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்திசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு 23 வயதான ஒரு ஆணும், 21 ...

Read More »

இன்ஸ்டாகிராம் கமென்ட்களில் எமோஜி ஷார்ட்கட்!

இன்ஸ்டகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக எமோஜி ஷார்ட்கட் சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் இம்முறை தனித்துவம் வாய்ந்த எமோஜி ஷார்ட்கட்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜி கீபோர்டின் மேல் வைக்கப்படும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் புதிய அம்சம் இன்னும்   வழங்கப்பட இருக்கிறது. எனினும் இந்த அம்சம் கமென்ட்ஸ் பகுதியில் மட்டுமே வேலை செய்கிறது. அந்த வகையில் ஸ்டோரிக்கள் மற்றும் சொந்த ...

Read More »

கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார்! -ஸ்ரீகாந்தா

கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தான் வருவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார் . நேற்று மடடக் களப்பு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வருடத்துக்குள் தீர்வு இல்லை என்றால் நாங்கள் தீர்க்கமாக பேசி நல்லதொரு முடிவினை எமது மக்களுக்கு தெரிவிப்போம் ஆகவே மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கிழக்கை பொறுத்த வரையில் ...

Read More »

விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்!

யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார். ‘முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான். ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் ...

Read More »

ஆட்சி மாற்றத்தின் பின் தீர்வு என்கிறார் பந்துல!

கடந்த 2017 ஆம் ஆண்டு ரவி கருணாநாயக்க ஐ.ஓ.சி. நிறுவனத்துடன் செய்துகொண்ட முறையற்ற உடன்படிக்கையே எரிபொருள் கட்டண மாற்றம் தொடர்பில் நீடித்து வரும் பிரச்சினைக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டு மஹிந்தவின் தலைமைத்துவத்திலான ஆட்சியே தோற்றம் பெறும் என்று சர்வதேச நிறுவனங்கள் கருத்துக்கணிப்புக்களின் ஊடாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இக்கணிப்புக்கள் நிச்சயம் வெற்றிப் பெறும் என்றார். அத்துடன் அரசாங்கத்தின் முறையற்ற மூன்று வருடகால பொருளாதார முகாமைத்துவத்தினால் பொருளாதாரம் பல துறைகளை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. ஆகவே ...

Read More »

பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த குழந்தைகள்!

ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் செல்போனே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் மொபைல் போன்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை தூக்கிகொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த போரட்டத்தை ...

Read More »

ஆனந்திக்கு இது முதல்முறை!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் – கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கயல் ஆனந்தி முதல்முறையாக சொந்த குரலில் (டப்பிங்) பேசியுள்ளார். நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை ...

Read More »