கபாலி படத்துக்கு பாடல் எழுதியதால் அதிக வாய்ப்புகள் வருவதாக கவிஞர் உமாதேவி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ரஜினியின் ‘கபாலி’ படத்தில் ‘மாயநதி’, ‘வீர துறந்தரா’ பாடல்களை எழுதியவர் கவிஞர் உமாதேவி. எம்.பில், பி.எச்.டி. பட்டம் பெற்ற இவர் கல்லூரி உதவி பேராசிரியர். ‘கபாலி’க்கு பாடல் எழுதியது பற்றி அவரிடம் கேட்ட போது. பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்துக்கு ஒரு பாடல் எழுதினேன். ‘கபாலி’ படத்துக்கும் ரஞ்சித் சார், என்னை அழைத்து ஒரு பாடல் இருக்கு, எழுதுங்கன்னு சொன்னார். முதல் பாடலாக “மாயநதி” பாடல் எழுதினேன். அந்த ...
Read More »குமரன்
ப்ளூடூத், எஃப்.எம் வசதியுடன் புதிய ‘மேஜர்’ ஸ்பீக்கர்
ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் “மேஜர்” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய டவர் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மைக், ப்ளூடூத் இணைப்பு மற்றும் USB/SD ஸ்லாட்டுகள் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப பொருட்கள், ஒலி/ஒளி மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவற்றை சந்தையில் அறிமுகப்படுத்திவரும் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம், தற்போது ‘மேஜர்’ என்ற பெயரில் புதிய டவர் பீக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மர அலமாரியின் உள்ளே இருக்கும் இந்த ஸ்பீக்கர்கள் பளபளப்பான முன்புறத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. . ஒவ்வொரு டவர் ஸ்பீக்கரும், குறைந்த அலைவரிசை ஒலிகளை வழங்கும் 16 செ.மீ ஒலிபெருக்கியை ...
Read More »அவுஸ்திரேலியா தொடர் வெற்றி
நேற்று(9) இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான T20 போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தனஞ்சய டி சில்வா 62 ஓட்டங்களையும், குஷால் ஜனித் பெரேரா 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன் தனது இறுதிப்போட்டியில் விளையாடிய டி.எம் டில்ஷான் 1 ஓட்டத்துடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அந்தவகையில் 129 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு களமிறங்கிய ...
Read More »இந்தியாவிற்கு எதிரான 2001-ம் ஆண்டின் டெஸ்ட் தொடர் மறக்க முடியாதது- ரிக்கி பாண்டிங்
இந்தியாவிற்கு எதிராக 2001-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மறக்கமுடியாத ஒன்று என அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் ரிக்கி பாண்டிங் நினைவுக் கூர்ந்துள்ளார். அவுஸ்ரேலியாவில் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய அணியுடன் விளையாடிய 2001-ம் ஆண்டு டெஸ்ட் தொடர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக கடந்த 2001-ம் அவுஸ்ரேலியா அணி அந்நாட்டிற்கு சென்றது. இந்த ...
Read More »4161 கோடி குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு
அமைச்சுக்கள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரி 4161 கோடிக்கும் அதிக குறைநிரப்பு மதிப்பீடு சிறீலங்கா நாடாளுமன்றில் நேற்று (9) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு, வெளிவிவகாரம், சுகாதாரம், போக்குவரத்து, பெருந்தெருக்கள், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கல்வி, விளையாட்டு, இடர் முகாமைத்துவம், உள்நாட்டு அலுவல்கள், நிதி உள்ளிட்ட பல அமைச்சுக்களின் சம்பளம் மற்றும் பல்வேறு செலவுகளுக்காக இந்த மேலதிக நிதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மையில் உருவாக்கப்பட்ட இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கான நிதியாக 1121 இலட்சம் குறைநிரப்பு மதிப்பீடு சமர்பிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கப் ...
Read More »இன்று யாழ்.பொலிஸ் நிலைய கட்டட திறப்பு விழா
இன்று (9) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் யாழ்.பொலிஸ் நிலைய புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதில், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில், பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »மின்னஞ்சலை மேம்படுத்திக்கொள்ள ஐந்து வழிகள்
முகப்புத்தகம், வாட்ஸ் ஆப், ட்விட்டர் என வந்துவிட்டாலும், மின்னஞ்சலின் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், அலுவலகத் தொடர்புக்கும் பெரும்பாலானோர் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. நல்ல வேளையாக மின்னஞ்சல்களைச் சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. அந்த வகையில், மின்னஞ்சல் பயன்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவும் அருமையான சேவைகள் சில: உடனடி மின்னஞ்சல் வாசகங்கள் மின்னஞ்சலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ‘கேன்ட் இமெயில்ஸ்’ (http://www.cannedemails.com/#) இணையதளத்தைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மின்னஞ்சலுக்காகத் தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்கலாம். ...
Read More »பாலா இயக்கத்தில் யுவன் – ‘சூப்பர் சிங்கர் பிரகதி
பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக யுவனும், நாயகியாக பிரகதியும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து தனது படத்தில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குநர் பாலா. வேல.ராமமூர்த்தி எழுதிய புத்தக்கத்திலிருந்து சிறுபகுதியை எடுத்து திரைக்கதையை அமைத்து படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா உள்ளிட்டவர்களைக் கொண்டு இப்படம் தொடங்கவிருப்பதாக பாலா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அப்படத்துக்கு முன்பாக முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார் பாலா. இதற்கான நடிகர், நடிகைகள் ...
Read More »அன்புதான் என்னிடமுள்ள ஒரே செய்தி!- இரோம் ஷர்மிளா
உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டாலும்கூட, இரோம் ஷர்மிளா தலைமுடியை இன்னும் பின்னிப்போட வில்லை. நகங்களை வெட்டிக்கொள்ளவில்லை. ஒப்பனையற்ற முகம். வாஞ்சையான பார்வை. இடையிடையே அவருடைய நினைவு பரபரவென்று எங்கோ செல்வதையும் சடாரென்று மோதி பழைய இடம் நோக்கித் திரும்புவதையும் அவருடைய பார்வைகளின் போக்கினூடே யூகிக்க முடிகிறது. ஆங்கிலத்தில் உரையாடுகையில், நிதானமாக யோசித்து யோசித்துப் பேசுபவராகவும், மணிப்பூரியில் பேசுகையில் கடகடவென்று கொட்டுபவராகவும் தெரிந்தார். சிரிக்கும்போது சத்தமாக வாய்விட்டுச் சிரிக்கிறார். இக்கட்டான விஷயங்களைப் பேசுகையில், மௌனத்தில் ஆழ்ந்துவிடுகிறார். மூழ்கடிக்க முயலும் விரக்தி, ஏமாற்றம், வலி, எதிர்காலம் குறித்த ...
Read More »பறப்பின் போது சாம்சங் போன்களுக்கு அவஸ்ரேலிய இரு விமான நிறுவனங்கள் தடை
விமானத்தில் பயணம் செய்யும் போது சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று அவுஸ்ரேலியாவை சேர்ந்த இரு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. அவுஸ்ரேலியாவில் செயல்பட்டு வரும், குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் அவுஸ்ரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை ஆன் செய்வது மற்றும் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகளுக்கு வலியுறுத்தியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங்சின் புதுரக போன் வெடிக்கும் அபாயம் ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			