அமைச்சுக்கள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரி 4161 கோடிக்கும் அதிக குறைநிரப்பு மதிப்பீடு சிறீலங்கா நாடாளுமன்றில் நேற்று (9) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் பாதுகாப்பு, வெளிவிவகாரம், சுகாதாரம், போக்குவரத்து, பெருந்தெருக்கள், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கல்வி, விளையாட்டு, இடர் முகாமைத்துவம், உள்நாட்டு அலுவல்கள், நிதி உள்ளிட்ட பல அமைச்சுக்களின் சம்பளம் மற்றும் பல்வேறு செலவுகளுக்காக இந்த மேலதிக நிதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் உருவாக்கப்பட்ட இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கான நிதியாக 1121 இலட்சம் குறைநிரப்பு மதிப்பீடு சமர்பிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் ஒருங்கிணைப்பு அலுவலகமொன்றை நிறுவுவதற்காக பிரதமர் அலுவலகத்தினால் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா நிதி கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.