குமரன்

‘ பிக்சாலைவ்” – தமிழனின் முயற்சியில் உருவாகி இருக்கும் சமூக வலைத்தளம்!

உலகின் பிரபல சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் வெளிநாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழனின் முயற்சியில் உருவாகி இருக்கும் சமூக வலைத்தளமாக பிக்சாலைவ் இருக்கிறது. இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் பலவும் ஒரே மாதிரியான அம்சங்களை வழங்குகின்றன. அந்த வகையில் சமூக வலைதள சேவையில் புது அம்சங்களுடன் களம் இறங்கியிருக்கும் புதுவரவாக பிக்சாலைவ் ...

Read More »

முதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் அவுஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை குவித்துள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந் நிலையில் இவ் விரு அணிகளுக்குமிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பேர்த்தில் ஆரம்பமானது. ...

Read More »

தாய்நிலத்தை விட்டு வெளியேற்றும் வெனிசுவேலா மக்கள்!

கடந்த நான்கு ஆண்டுகளில் இருபது லட்சத்திற்கும் அதிகமான வெனிசுவேலா மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இந்த லத்தீன் அமெரிக்க தேசத்தில்? மின்சாரமில்லை, உணவில்லை, எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்கிறார்கள் அம்மக்கள். புகைப்படகலைஞர் கிலென்னா கோர்டன் கொலம்பியா எல்லையில் பயணம் செய்து வெனிசுசேலாவிலிருந்து வெளியேறும் குடும்பங்களை சந்தித்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களும், கோர்டனிடம் அவர்கள் பகிர்ந்த தகவல்களும்தான் இந்தத் தொகுப்பு. இந்த நதி கொலம்பியா மற்றும் வெனிசுவேலா எல்லையில் இருக்கிறது. இங்கு சட்டரீதியாக எல்லையை கடக்கும் பகுதி ...

Read More »

துப்பாக்கி முனை!

ஒரு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்வதற்காக மும்பையிலிருந்து ராமேஸ்வரம் வரும் காவல் துறை  அதிகாரி, அதே நபரைக் காப்பாற்றப் போராடினால் அதுவே ‘துப்பாக்கி முனை’. ராமஸ்வரம் தீவில் 15 வயது சிறுமியை  ஆசாத் (‘மிர்ச்சி’ ஷா) என்கிற மாவோயிஸ்ட் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. ஆசாத்தை என்கவுன்ட்டர் செய்வதற்காக காவல் துறை  அதிகாரி  போஸ் (விக்ரம் பிரபு)  மும்பையிலிருந்து ராமேஸ்வரம் விரைகிறார். கொலையான சிறுமியின் தந்தை உய்யா (எம்.எஸ்.பாஸ்கர்) விக்ரம் பிரபுவிடம் நடந்தது என்ன? என்பதைச் சொல்கிறார். கோபமும் வேகமுமாக ...

Read More »

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா?

இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்றுவரும் பேர்த் ஆடுகளத்தை அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமான விதத்தில் தயாரிக்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கேட்டுக்கொண்டதாக வெளியான தகவல்களால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களிற்கு மிகவும் சாதகமான ஆடுகளத்தை தயாரிக்குமாறு என்னை கேட்டுக்கொண்டுள்ளனர் என ஆடுகள தயாரிப்பாளர் பிரெட் சிப்தோர்ப் தெரிவித்துள்ளார். பந்து உயர எழும்பி பார்ப்பதை பார்ப்பதற்கு அவர்கள் விரும்பினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இது எனக்கு முன்கூட்டியே கிறிஸ்மஸ் பரிசு கிடைத்துள்ளதை போன்றுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் எதிரணி ...

Read More »

மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை!- ஜேவிபி முயற்சி

அரசமைப்பை திட்டமிட்டு மீறியதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பிற்கு முரணான விதத்தில் செயற்பட்டார் என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அடிப்படையாகவைத்தே அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரி தொடர்ந்தும் அரசமைப்பை மீறினால் அவரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோம் என தெரிவித்துள்ள விஜிதஹேரத்  ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரமுடியும் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அரசமைப்பு சதியில் ஈடுபட்ட ...

Read More »

மடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும்!

மடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி  செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும்,ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு ஐனாதிபதி இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு சரியான தொரு முடிவை எமது மக்களுக்கும், எமது மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் சிறிலங்கா  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றிய செயலாளர் ஜே.ஜே.கெனடி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ...

Read More »

தமிழை வளர்ப்பது எந்தளவு முக்கியமோ தமிழை பரப்புவதும் அந்தளவு முக்கியம்தான்!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95புள்ளிகளை செல்வன் ஹரிஷ்ணா செல்வவிநாயகன் அவர்களுடனான செவ்வி கேள்வி: பரீட்சை திணைக்களம் (NESA) உங்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த பொழுது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? பதில்: அடக்க முடியாத ஆனந்தம். அந்தச் செய்தியை கேட்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. இது கனவா? நனவா? என்று என்னையே பல தடவைகள் கேட்டேன். அந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. கேள்வி: இந்த பரீட்சை பெறுபேறை எதிர்பார்த்தீர்களா? பதில்: ...

Read More »

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி தவறானது!

சிறிலங்கா ஜனாதிபதியினால்நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியானால் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவ்வாறு கலைக்க வேண்டுமானால் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அப்போது பிரதமாராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். அதிலிருந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி ...

Read More »

கங்காரு நாட்டில் சாதனை படைத் ஈழத்து மாணவன்!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து, மாநிலத்தில் முதலாவதாக, செல்வன் ஹரிஷ்ணா செல்வவிநாயகன் வந்திருக்கின்றார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன் – பத்மினி தம்பதியின் சிரேஷ்ட புதல்வனான ஹரிஷ்ணா, அவுஸ்திரேலியாவில் பிறந்து ஆரம்பக் கல்வி முதல் வென்ற்வேர்த்வில் தமிழ்ப் பாடசாலையில் தமிழ் மொழியைக் கற்றார். கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள இம்மாணவனின் பெறுபேறுகள், இன்று (12) வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைத் திணைக்களம், தொலைபேசியூடாகப் பெறுபேற்றை கடந்த வெள்ளிக்கிழமை (7) அறிவித்தபொழுது அவரின் மனநிலை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, ...

Read More »