கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஓய்வு பெற்றதையடுத்து கடந்த திங்கட்கிழமை புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கத் தூதரகத்திடமிருந்தும், ஐக்கிய நாடுகளிடமிருந்தும் கூர்மையான கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையில் இனத்துவ நீதிக்கும், நல்லிணக்கத்திற்கும் பாதகமான விளைவுகளை இந்த நியமனம் ஏற்படுத்துமென்று அவை தெரிவித்துள்ளன. பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரி ஒருவரை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்த செயல் இலங்கையில் அமெரிக்க இராணுவ ...
Read More »குமரன்
குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள்!
லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளர் அநுரகுமார எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தான்தான் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துக்கொண்டு, அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் ஆதரவுடனும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கணிசமான ஆதரவுடனும், தன் பாணியின் ஊடாகத் தேர்தல் பிரசார வலத்தை ஆரம்பித்துள்ளார். ஆனால், ஐ.தே.கவில் ...
Read More »’நிறைவேற்று ஜனாதிபதி முறையை நிச்சயமாக ஒழிப்போம்’!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு தாம் முன்னின்று செயற்படுவோம் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைக் கூறியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என முன்னதாக உறுதியளித்தவர்கள் அதனை நிறைவேற்றவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Read More »முக்கிய விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு!
ஆறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை பதில் காவல் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை உள்ளிட்ட முக்கியமான ஆறு சம்பவங்கள் தொடர்பில் இந்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன. இதனை காவல் துறை ஊடகப்பேச்சாளர் காவல் துறை அத்தியட்சர்கள் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். முன்னதாக, குறித்த அறிக்கைகளை நாளை ( 23) அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்குமாறு பதில் காவல் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, ...
Read More »பிக்பாஸ் நடிகை சுஜா வருணிக்கு ஆண் குழந்தை….
மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனை திருமணம் செய்த நடிகை சுஜா வருணிக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகை சுஜாவருணி. கடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். அதன்பின் மறைந்த சிவாஜியின் முத்த மகன் ராம்குமாரின் மகன் சிவாஜி தேவ் என்கிற சிவக்குமாரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சிவக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.
Read More »ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு!
ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே-யில் இன்று தொடங்கியது. போட்டி உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்க வேண்டும். மழை ...
Read More »திரைத்துறையில் நன்றி என்பதே இல்லை – அமீர்
எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர், திரைத்துறையில் நன்றி என்பதே இல்லை என்று கூறியிருக்கிறார். பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படத்தைச் சார்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர். இதில் இயக்குநர் அமீர் பேசும்போது, ‘என்னுடைய வாழ்வில் கேட்டுப் பெறக் கூடாத விஷயங்கள் மூன்று வைத்திருக்கிறேன். கைத்தட்டல், ...
Read More »அவுஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து மாயமான மூன்று வயது சிறுமி!
அவுஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து மாயமான் மூன்று வயது சிறுமி நீண்ட நேர தேடுதலுக்கு பின் அணைக்கட்டுக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவுஸ்திரேலியாவின் நூசாவுக்கு அருகிலுள்ள கூத்தராபாவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து எலெனோர் அல்லது எல்லி என்கிற சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிரமாக தேடுதல் வேட்டை ஆரம்பமானது. அவரது உறவினர்கள் பலரும் பேஸ்புக் பக்கத்தில் உதவி கேட்டதை அடுத்து, தன்னார்வாளர்களும் அப்பகுதியில் குவிந்து சிறுமியை தேட ஆரம்பித்தனர். 8 ...
Read More »இனி அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற வேண்டியதில்லை!
அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் நாடு கடத்தப்பட இருந்த இந்திய வம்சாவளியினரான ஒரு மாணவி, புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தெரிவிக்கும் ஒரு செய்தியாக பிரபல அவுஸ்திரேலிய பாடல் ஒன்றை பாடி நெகிழ வைத்த சம்பவம் நினைவிருக்கலாம். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜசேகரன் மாணிக்கம் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த நிலையில், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பதற்காக 2103ஆம் ஆண்டு குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார். அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை இல்லை என்பதால், அவருக்காக மருத்துவ செலவுகளை செய்ய இயலாது ...
Read More »விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்ட திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜுலை 11ஆம் திகதி நாடாளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் முஸ்லிம் உறுப்பினர்கள் 11 பேர் ஒன்றுக்கூடி, முஸ்லிம் ...
Read More »