மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனை திருமணம் செய்த நடிகை சுஜா வருணிக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகை சுஜாவருணி. கடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். அதன்பின் மறைந்த சிவாஜியின் முத்த மகன் ராம்குமாரின் மகன் சிவாஜி தேவ் என்கிற சிவக்குமாரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சிவக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal