ஆறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை பதில் காவல் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை உள்ளிட்ட முக்கியமான ஆறு சம்பவங்கள் தொடர்பில் இந்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இதனை காவல் துறை ஊடகப்பேச்சாளர் காவல் துறை அத்தியட்சர்கள் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குறித்த அறிக்கைகளை நாளை ( 23) அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்குமாறு பதில் காவல் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அத்துடன், இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபரால், கடந்த 15 ஆம் திகதி பதில் காவல் துறை மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal