நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு தாம் முன்னின்று செயற்படுவோம் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைக் கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என முன்னதாக உறுதியளித்தவர்கள் அதனை நிறைவேற்றவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Eelamurasu Australia Online News Portal