குமரன்

யுத்த வெற்றிக்காக உரிமை கோரும் வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தலில்  களமிறங்கியிருப்பவர்களில் பிரதான வேட்பாளர்களாக விளங்கும் கோத்தாபய ராஜபக்க்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர்  யுத்த வெற்றியை பிரதானமாகக் கொண்டு பிரசாரத்தை முன்னெடுப்பதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.  இது தீவிரமடையும் பட்சத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஜனநாயகத்தன்மை  இல்லாது போய் விடும் என்பதால் யுத்த வெற்றியை பிரசாரத்தில் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளது. எனினும்  இதை மகிந்த அணியினர் விடுவதாக இல்லை. எந்த தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் யுத்த வெற்றியை பிரசாரத்தில் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ...

Read More »

கொழும்பில் கைதான 52 மாணவர்களுக்கும் பிணை!

கொழும்பில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட 52 மாணவர்களையும் பிணையில் செல்ல கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குறித்த மாணவர்கள் 52 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்ததுடன், கைதான மேலும் ஒரு மாணவனை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

Read More »

குமார வெல்கம அதிரடி அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய காட்சியையோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையோ ஆதரிக்க போவதில்லை என்று கூறியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சிறந்த ஒரு வேட்பாளருக்கே எனது வாக்கினை பதிவு செய்ய போவதாக குறிப்பிட்டார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவியேற்று 25 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு அவரை பாராட்டுவதற்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வதற்கான சுதந்திர காட்சியின் மூலம் கலந்துரையாடல் ஒன்று கிராண்ட் ஓரியன்ட் ஹோட்டலில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் ...

Read More »

வெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களுக்கு தடை!

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களை தவிர்க்குமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் கொள்கை முடிவுகள் தொடர்பாக விமர்சிக்கும் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் மீது டொனால்ட் டிரம்ப் சமீபக்காலமாக சீற்றத்துடன் கண்டனக் கனைகளை தொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் பிரபல நாளிதழ்களான வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கான சந்தா தொகையை நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், இந்த இரு நாளிதழ்களும் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டி வந்தார். ...

Read More »

பாடல்கள், ஹீரோயின் இல்லாத கதையில் நடித்தது ஏன்?

பாடல்கள், ஹீரோயின் இல்லாத கதையில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகர் கார்த்தி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கைதி’. நாளை வெளியாக உள்ள இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்த படத்தில் பாடல்கள், நாயகி என எதுவுமே இல்லை. மேலும் 10 வயது பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்துள்ளார் கார்த்தி. இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து கார்த்தி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ...

Read More »

ஆஸ்திரேலியா தீர்ப்பாயம் முன் குவியும் அகதிகளின் விண்ணப்பங்கள்!

அகதிகளின் தஞ்சக்கோரிக்கை மற்றும் குடியேறிகளின் விசா விண்ணப்பங்கள் தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் முடிவை மறுபரிசீலணை செய்யக்கோரி குவியும் விண்ணப்பங்கள் பெரும் அளவில் உயர்ந்துள்ளது. “இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது,” என செனட் முன்பு தெரிவித்துள்ளார் நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் பதிவாளரான சியன்  லேதெம். இதனால், விண்ணப்பங்கள் தொடர்பாக தீர்ப்பாயம் முடிவெடுப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. “விண்ணப்பங்களின் எண்ணிக்கை உயர்வதால், 2017-18ல் 77 சதவீதமாக இருந்த முடிவெடுக்கும் விகிதம ...

Read More »

குற்றவாளிகளை நாடு கடத்தும் சட்டமூலத்‍தை திரும்பப் பெற்ற ஹொங்கொங்!

குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சட்டமூலத்தை ஹொங்கொங் அரசாங்கம் முழுமையாக திரும்பப் பெற்றுள்ளது.   பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஹொங்கொங் 1997 ஆம் ஆண்டில் சீனாவின் ஒரு பகுதியாக்கப்பட்டது. ஆனால், ‘ ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் ‘ என்ற கோட்பாட்டின் கீழ் அது சுயாட்சிப் பிராந்தியமாகவே இருந்தது. 2047 ஆம் ஆண்டில் ஹொங்கொங் முழுமையாக சீனாவுடன் ஒன்றிணைக்கப்படவிருக்கிறது. இந்நிலையில், குற்றவாளிகளை சீனாவுக்கும் தைவானுக்கும் நாடு கடத்தி விசாரிக்கும் சட்டமூலத்தை ஹொங்கொங் அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் கொண்டு ...

Read More »

ஜனாதிபதியின் தெரிவு தமிழ், முஸ்லிம் வாக்குகளிலேயே தங்கியுள்ளது!

இம்­முறை ஜனாதி­பதித் தேர்­தலில் 35 பேர் போட்­டி­யி­டு­கின்­றனர். ஆயினும் மூன்று பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய மூன்று கட்­சி­களின் சார்பில் போட்டியிடும் ஜனாதி­பதி அபேட்­ச­கர்­களில் ஒரு­வரே ஜனாதி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டுவார். நான் சென்ற வாரம் எழு­திய கட்­டு­ரையில் ஜனாதி­பதி தேர்­தலில் எவ்­வாறு வாக்­க­ளிக்க வேண்டும் என்றும் வெற்றி பெறு­வதை எவ்­வாறு தீர்­மா­னிப்­பது என்­ப­தையும் தெளி­வாகக் கூறி­யி­ருந்தேன். ஆகவே மீண்டும் அதனைக் குறிப்­பிட வேண்­டிய தில்லை என நினைக்­கி­றேன. அக்­கட்­டு­ரையைப் படித்­த­வர்கள் ...

Read More »

திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்!

இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய  அதிகாரிகளிற்கு  தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கடற்படையினர் தமது சித்திரவதைகளை நிறுத்தவில்லை என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு பல முகாம்களில் சித்திரவதைகள் ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 13 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் சிலாபம் காவல் துறையினர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சிலாபம், சுதுவெல்ல பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து இவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், பலாலி, மாங்குளம் மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது தொடக்கம் 44 வயதுடையவர்கள் ஆவர். ...

Read More »