குமரன்

சாமி ஸ்கொயர்!

பெற்றோர் மரணத்துக்குக் காரணமானவர்களை 28 ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்கும் மகனின் கதையே ‘சாமி ஸ்கொயர்’. ஐஏஎஸ் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் ராம் சாமி (விக்ரம்) மத்திய அமைச்சரிடம் (பிரபு) மேனேஜராகப் பணிபுரிகிறார். பிரபுவுக்கு ரவுடி ராவணப் பிச்சை (பாபி சிம்ஹா) தொடர்ந்து மிரட்டல் விடுக்கிறார். பணத்துக்காக அமைச்சர் மகளை (கீர்த்தி சுரேஷ்) கடத்த, அடுத்த அரை மணிநேரத்தில் அவரை மீட்டு பத்திரமாக வீட்டில் சேர்க்கிறார். எதிர்பார்த்த மாதிரியே இருவருக்குள்ளும் பட்டாம் பூச்சி பறக்க, காதல் முளைக்கிறது. அதற்கு அமைச்சர் தடையாக நிற்கிறார். ஐஏஸ் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மாம்பழத்திற்குள்ளும் தையல் ஊசி!

அவுஸ்திரேலியாவில் பழங்களுக்குள் ஊசிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மாம்பழத்தினுள் ஊசி காணப்பட்டதாக பெண் ஒருவர் முறையிட்டுள்ளார். ஏற்கனவே அவுஸ்திரேலியா முழுவதும் ஸ்ரோபெர்ரியில் தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்தோடு ஸ்ரோபெர்ரி பழங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குயின்ஸ்லாந்தில் வாழைப்பழத்திற்குள் தகடொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக முறையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து பழங்கள் தொடர்பான பரபரப்பு மேலும் இரட்டிப்பானது. இதையடுத்து ஆப்பிள் பழங்களில் ஊசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிய பின்னணியில் தற்போது மாம்பழத்திற்குள் ஊசி காணப்பட்டதாக நியூ சவுத் ...

Read More »

கோட்டையைத் தந்தால் மக்களின் காணிகளை கையளிக்க தயார்!- தளபதி தர்சன ஹெட்டியாராச்சி

யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ். மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை தெரிவித்தார்.. அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் பல ஏக்கர் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடம் கையளித்து வருகின்றோம். இன்னமும் கையளிக்கவுள்ளோம். யாழ் கோட்டை பகுதியை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் உள்ள இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டு ஏனைய பகுதிகளை ...

Read More »

ஒரு காலம் விடைபெற்றுக்கொண்டது!

புரட்சிகரக் கம்யூனிஸ்ட் போராளியின் வாழ்க்கைத் துணைவராகி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தலைமறைவு வாழ்க்கையின் சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் முகங்கொடுத்து, பிடிவாதம் மிக்க கணவரிடமிருந்து தனிமைப்பட்டு, மகனையும் மகளையும் தன் காலத்திலேயே பறிகொடுத்து, மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து பெற்ற இனிப்பும் கசப்பும் கலந்த அனுபவங்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் மூதாட்டி கோட்டேஸ்வரம்மா தமது நூறாவது வயதில் காலமாகிவிட்டார். ஒரு காலம் விடைபெற்றுக்கொண்டது. பேரனுபவங்கள் நிறைந்த வாழ்க்கை கோட்டேஸ்வரம்மாவுடையது. நான்கு அல்லது ஐந்து வயதாகியிருந்தபோதே, குழந்தைத் திருமணம் செய்யப்பட்டு, பருவம் எய்துவதற்கு முன்பே கணவனை இழந்தவர். ...

Read More »

அவுஸ்திரேலியாவில் உள்ள ஹோட்டலில் நச்சு வாயுக்கசிவு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஹோட்டலில் நச்சு வாயுக்கசிவினால் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிட்னியில் உள்ள ஹோட்டலொன்றில் நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கண்கடி மற்றும் எரிச்சல் ஆகிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Pullman Sydney Hyde Park ஹோட்டலில் உதவியாளர் ஒருவர் நீச்சல் தாடகத்துக்குரிய குளோரினுடன் இன்னொரு இரசாயன பதார்த்தத்தை கலந்துள்ளார். அப்போது குறித்த திரவக் கலவையிலிருந்து வெளிவந்த புகை 22 வது மாடியின் வழியாக பல்வேறு ...

Read More »

படகு கவிழ்ந்து விபத்து – 44 பேர் பலி!-தான்சானியா

தான்சானியா நாட்டில் உள்ள லேக் விக்டோரியா எனும் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம் கிமீ பரப்பளவும் 272 அடி ஆழமும் உடையதாகும். இந்நிலையில், தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் ...

Read More »

இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் கைது !

இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊடகவியிலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினரால் இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More »

மது மயக்கத்தில் இருப்பவர்களை எழுப்பும் முயற்சி! -கபிலன் வைரமுத்து நேர்காணல்

டாஸ்மாக்  மதுபான கடை களால் தமிழ்நாட்டில் எத்தனையோ குடும்பங் கள் சீரழிந்துவரும் சூழலில்,  மதுவுக்கு எதிரான பாடலை உருவாக்கியிருக்கிறார் கபிலன் வைரமுத்து. ‘இந்தி யன்-2’ படத்தின் வசனப் பணிகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த  கபிலன் வைரமுத்துவோடு ஒரு நேர்காணல்: மதுக் கலாச்சாரத்தைப் பற்றிய பாடலுக்கு எதற்கு  ‘ஏந்திரு அஞ்சலி ஏந்திரு’ என்ற தலைப்பு? மணிரத்னத்தின் `அஞ்சலி’ திரைப்படத்தில் மரண உறக்கத்தில் இருக்கும் தன் சகோதரியை கதறி கதறி எழுப்புவாள் அந்தச் சிறுமி. அதைப் போல மது மயக்கத்தில் இருக்கும் எத்தனையோ சகோதர – சகோதரிகளை எழுப்புகிற ...

Read More »

கணினி, செல்பேசிக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம் !

கணினி, செல்பேசிகளுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய பிரபல தமிழறிஞர் பச்சையப்பன் சென்னையில் இன்று காலை காலமானார். கி.த பச்சையப்பன் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். இவர் தனது 85 வயதில் மரணம் அடைந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் தமிழறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசி மூச்சு வரை தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளிதழ்களில் சமஸ்கிருத ஆதிக்கம் இருந்த போது அதை தமிழை நோக்கி திருப்பியவர் பச்சையப்பன். இவரது குடும்பம் தொடர்பான சிவில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்னை உயர் ...

Read More »

ஆர்னோல்டின் முடிவு திலீபனின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்! -காக்கா

உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப் பிரதேச சபைகள் பொறுப்பெடுப்பதை தவிர்க்க முடியாமல் போகும். இந்த இரு சபைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ளன என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15 ஆம் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் வேதனையளிக்கின்றன. ...

Read More »