இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இணைந்துமுன்னெடுக்கும் பாரிய கடற்படைஒத்திகைஇன்று இந்துசமுத்திரத்தின்கிழக்குபகுதியில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த ஒத்திகையில் அவுஸ்திரேலியாவின் எச்எம்எஸ் ஹோபார்ட் நாசகாரி இந்தியாவின் அதிநவீன கடற்படை கப்பல்களான ஐஎன்எஸ் சஹ்யாட்ரி,கர்முக் ஆகியன இணைந்துகொள்கின்றன. இரண்டு நாடுகளின் ஹெலிக்கொப்டர்களும் இந்த ஒத்திகையில் பங்கெடுக்கவுள்ள அதேவேளை இந்தியா தனது அதநவீனஅதிவேக கடலோரா கண்காணி ப்பு விமானத்தை இந்தஒத்திகையில் ஈடுபடுத்தவுள்ளது. இயங்கும் தன்மையை நோக்கமாக கொண்ட இந்த பயிற்சியின் போது அதநவீன தரையிலிருந்து வானில் காணப்படும் இலக்குகளை தாக்கும் ஆயுதங்களையும் பரிசோதனை செய்யவுள்ளதாக இந்திய கடற்படை ...
Read More »குமரன்
20 ஆவது திருத்தத்துக்கு எதிராக சம்பந்தனும் மனு
அரசியலமைப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயர் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார். ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20ஆவது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் பாராளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.
Read More »முகமாலை முன்னரங்கில் மீட்கப்பட்ட மண்டை ஓடு எலும்புக்கூடு பெண் போராளியின் என அடையாளம்
பளை முகமாலையில் முன்னர் விடுதலைப் புலிகளின் முன்னரங்கு காவல் பகுதியில் அகழ்வு மேற்கொள்ள இராணுவத்தினர் நீதிமன்ற உத்தரவை பெற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் நேற்று (23) அகழ்வு பணியின் போது இரு பெண் போராளிகளின் இலக்க தகடுகள், ஒரு தொகுதி எலும்புக்கூடுகள், மற்றும் சீருடைகள் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் ஆயுதங்கள் மற்றும் எலும்புக் கூடுகள் இருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பகுதியை தோண்டி ஆராய நீதிமன்ற அனுமதியை ...
Read More »சூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் – பிரபல நடிகர் ஆவேசம்
நடிகர் சூர்யா பல விவகாரங்களில் அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருவதாக பிரபல நடிகர் கடுமையாக சாடியுள்ளார். நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். சூர்யாவின் அந்த அறிக்கை பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அரசியல்வாதிகள் முதல் திரையுலகினர் வரை பலர் சூர்யாவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்தாலும், பாஜகவினர் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி, சூர்யாவை ...
Read More »பூவெலிக்கடவில் உதிர்ந்த பூக்கள்!
கண்டி பூவெலிக்கட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. அந்த உயிர்களின் பெறுமதி குறித்த கேள்வியே எம் முன் நிற்கும் கேள்வி. அவர்கள் பாதுகாப்பான ஒரு இல்லத்தில்தான் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அருகாமை வீடு பாதுகாப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட்டதனால் அம்மாவும் அப்பாவும் குழந்தையும் என ஓர் அழகிய குடும்பம் இந்தமண்ணில் இருந்து பிரிந்து இலங்கை நாட்டுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துச் செல்கிறது. அந்தப் பாடம்தான் மதிப்பாய்வு. கடந்த பாராளுமன்ற காலத்தில் (2015 -2020) ஓர் இனத்தின் / ...
Read More »11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி
இலங்கையை சேர்ந்த அகதி ஒருவர் அவுஸ்திரேலிய அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்த போதிலும் 11 வருடங்களாக குடியேற்றவாசிகளுக்கான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெரும்பான்மையினத்தை சேர்ந்த அந்த நபரின் உண்மையான பெயரை வெளியிடவிரும்பாத கார்டியன் அலெக்ஸ் என்ற பெயரை பயன்படுத்தி அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து செய்திவெளியிட்டுள்ளது. அலெக்சிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என கார்டியன் தெரிவித்துள்ளது. எனினும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு முறையினால் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் அலெக்ஸ் என கார்டியன் ...
Read More »2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்
கிரிலாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. பசுமை இல்லா வாயுகள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரிலாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. பனிக்கட்டிகளில் இருந்து உருகும் நீரானது மொத்த உலக கடல் மட்ட உயர்வுகளில் மூன்றில் ஒரு ...
Read More »தமிழனே தமிழனுக்கு எப்போதும் எதிரியும் துரோகியும்……!
ஆட்சியாளர்களும் ஜனாதிபதிகளும் மாறும்போது இலங்கை நாட்டின் சட்டங்களும் மாறுகின்றதா என்ற கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் எழுகின்றது. ஜனாதிபதி கோட்டபாய ஒரு நாடு ஒருசட்டம் என கூறுகின்றார் அப்படியானால் அவருக்கு முன் பதவியல் இருந்த ஜனாதிபதிகள் இரண்டு சட்டம் ஒருநாடு என்ற விதமாகவா செயல்பட்டனர் ஏனெனில் கடந்த காலங்களில் தியாகி திலீபனின் நினைவு இந்த நாட்டில் பல இடங்களில் சுதந்திரமாக இடம்பெற்றபோது ஏன் இவ்வருடம் நடத்தமுடியாமல் சட்டத்தால் தடுக்கப்படுகிறது என, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதித் தலைவருமான ...
Read More »இன்று நாடாளுமன்றில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்!
“நினைவேந்தல் தடை உத்தரவுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகளில் ஜனாதிபதி தலையிடமாட்டார் எனவும் சாக்குப் போக்குக் கதைகள் கூறி ராஜபக்ஷ அரச தரப்பினர் நழுவமுடியாது. நினைவேந்தல் தடை யுத்தரவுகளை உடன் நீக்கவேண்டும்” என வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா. “தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புக்களுக்கும் பெரும் நன்றிகளைக்கூறுகின்றோம். ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள ...
Read More »திலீபன் நினைவேந்தல் நிகழ்வும் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையும்
“தமிழினத்தை ஒற்றுமைப்படுத்துவதற்கு எதிரிகளால்தான் முடியும்” என்ற கருத்து மீண்டும் உண்மையாகியிருக்கின்றது. திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நவக்கிரகங்கள் போல, ஒவ்வொரு திசையில் முரண்பட்டுக்கொண்டிருந்த தமிழ்க் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றது. குறைந்தபட்சம், திலீபன் நினைவேந்தலிலாவது தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது. பலமான ஒரு அரசாங்கம் தென்னிலங்கையில் பதவியேற்றிருக்கின்றது. கடும் சிங்கள – பௌத்த தேசியவாதத்தை தமது கொள்கையாகக் கொண்டுள்ள அந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. சிறுபான்மையின மக்கள் அனைவரும் தமது எதிர்காலம் குறித்து சிந்திக்க ...
Read More »
Eelamurasu Australia Online News Portal