ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் முக்கிய மாநாட்டை கூட்டி இருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு காவல்துறை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலகம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடன் தற்போதைய நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதால் இதற்கு எத்தகைய மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய விசேட நேர்காணலின் போது தெரிவித்தார். அடுத்த கட்டமாக தேர்தலை ...
Read More »குமரன்
சிறிலங்காவில் ஒரே குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா!
கொரோனா தொற்றாளர்களாக நேற்று (19) இனங்காணப்பட்ட 17 பேரில் 10 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்குச் சென்று மார்ச் மாதம் 12 ஆம் திகதி நாடு திரும்பிய கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணின் குடும்ப உறவினர்களே, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணின் கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »திட்டமிட்டதொரு பொருளாதார போரை அமெரிக்கா மீது சீனா தொடுத்துள்ளதா ?
சீனாவை மையப்படுத்தி உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீது அமெரிக்கா கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளதுடன் அந்த ஸ்தாபனத்திற்கான நிதி உதவியையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கான காரணம் என்ன ? உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதா ? மேலும் உலகில் இவ்வாறானதொரு சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதா ? போன்ற பல கேள்விகள் அனைவர் மத்தியிலும் காணப்படுபவையாகும். மறுப்புறம் ஆயுதப் போராக அல்லாது பொருளாதாரம் மற்றும் உலக தலைமைத்துத்தை மையப்படுத்தியதொரு இராஜதந்திர போரை அமெரிக்கா மீது சீனா தொடுத்துள்ளதா ...
Read More »அன்னை பூபதியின் 32 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்! முன்னணியினரால் நினைவேந்தல்!
நாட்டுப்பற்றாளர் தியாகி பூபதி அம்மாவின் நினைவு தினமான இன்று மட்டக்களப்பு நாவலடி பகுதியில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல் நிகழ்வு இன்று(19) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வு த.தே.மு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது. இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் அசாதாரண சூழ்நிலையால் இடைநிறுத்தப்பட்டது. தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் நினைவு தினமான இன்று அவரின் நினைவிடத்தில் சிறிலங்கா காவல் துறை மற்றும் படைப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் ...
Read More »தேர்தலை நடத்துவது ஆபத்தானது!
இப்போது தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ;தேசிய மற்றும் சர்வதேச சுகாதார நிபுணர்கள் நிலைமை சுமூகமானதும், பாதுகாப்பானதுமான நிலையை அடைந்திருக்கிறது என்பதை உறுதிசெய்யும் வரை தேர்தலை நடாத்துவது ஆபத்தானதும், பொறுப்பற்றதுமான செயலாகும் என்றும் சாடியிருக்கிறது. கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையில் பொதுத்தேர்தலை நடாத்துவது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான கடிதமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ...
Read More »ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்காக போராடியவர்களுக்கு $50,000 அபராதம்!
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள ஓர் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுவிக்கக்கோரி, கார் ஊர்வலப போராட்டம் நடத்தியதற்காக போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சுமார் 50,000 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு தூண்டியதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப் பதிவுச் செய்திருக்கிறது ஆஸ்திரேலிய காவல்துறை. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் சுமார் 7 ஆண்டுகளாக பல்வேறு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரியே இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டத்திற்கு முன்னதாக, போராட்டம் நடந்தால் ...
Read More »மெல்பேர்ன்- 65 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து!
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் 65 தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எளிதில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படகு மூலம் தஞ்சமடைய முயன்ற இந்த அகதிகள், பல ஆண்டுகளாக மனுஸ் தீவு தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்தனர். கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த இவர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்ட சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். “ஒரு நாளில் 23 மணிநேரம் ...
Read More »தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கொரோனா காரணமாக நடிகைகள் வீட்டிலேயே இருப்பதால், அதிகம் சாப்பிட்டு, தூங்கி உடல் குண்டாகி விடாமல் இருக்க பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாததால் தங்களது அழகைப் பராமரிக்கும் வேலைகளை அவர்களால் சரிவர செய்ய முடியவில்லை. வீட்டில் இருந்தபடியே, பேஸ் பேக்குகளைப் போட்டு அவர்கள் சமாளித்து விடுகின்றனர். ஆனால், புருவம் திருத்துதல், முடியை வெட்டிக் கொள்ளுதல் போன்றவற்றை செய்ய முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர். இது ...
Read More »தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணியவர்கள் கைது செய்யப்படுகின்றனர்!
கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணிய நபர்களையே இப்போது கைது செய்துள்ளோம். இந்த குற்றத்தில் தொடர்புபட்ட அனைவரையும் விரைவில் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிப்போம் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்கள் என பலர் அண்மைக் காலமாக கைதுசெய்யப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் ...
Read More »யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் பூரண குணமடைந்தனர்!
யாழில் கொரோனா ; தொற்றுக்கொள்ள இருவர் பூரண ; குணம் அடைந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் இது தொடர்பில் ; மேலும் குறிப்பிட்ட வைத்தியர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து வரப்பட உள்ளனர். தொடர்ந்தும் அவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனித்திருப்பார்கள் இருப்பார்கள் என்றார்.
Read More »
Eelamurasu Australia Online News Portal