முல்லைத்தீவு – கோப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில் புலனாய்வாளர்களால் ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – கோப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கச்செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ரியந்த பர்னாந்து தலைமையில், இலங்கை ஆசிரியர் சங்க வடமத்திய மாகாண இணைப்பாளர் ஜே.எம்.மில்லியாஸ், இலங்கை ஆசிரயர் சங்க வவுனியா மாவட்ட தலைவர் பாஸ்கர மூர்த்தி நேசராஜா உள்ளிட்ட குழுவினர் 15.07.2021 கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்திற்கு வருகை தந்திருந்தனர்.
Read More »குமரன்
மனித உரிமை மீள் கட்டமைப்பு பொறிமுறை பாெறுப்பை ராஜபக்ஷ ஒருவருக்கே வழங்க வேண்டும்
நல்லிணக்கம் தொடர்பில் மறுசீரமைப்பு நடவடிக்கைக்யாக 4 பொறி முறைகளை அமைப்பதாக கடந்த அரசாங்கம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தது. அதில் இரண்டு விடயங்களை நிறைவேற்றி& ; இருக்கின்றபோதும் உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு மற்றும் பொறுப்பேற்பதற்கான பொறிமுறை ஆகிய இரண்டு விடயங்களையும் மேற்கொள்வார்கள் என நான் ஒருபோதும் ; நினைக்கமாட்டேன் என கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். கடந்த 30 வருட காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய உயர் நீதிமன்ற நீதியரசர் துலிப் நவாஸ் தலைமையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி ...
Read More »சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும்
தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல், அவர்களின் தாயகக் கோட் பாட்டிலேயே மையம் கொண்டிருக்கின்றது. வரலாற்று ரீதியிலான அவர்களின் வாழ்விடங்களாகிய வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தையே அந்தக் கோட்பாடு உள்ளடக்கி இருக்கின்றது. இது வெறுமனே தாயக மண்ணாக அல்லாமல், சமூக, கலை, கலாசார, வாழ்வியல் கூட்டுச் சேர்க்கையின் அரசியல் அடையாள மாகத் திகழ்கின்றது. இதுவே தமிழ்த் தேசியத்தின் அடி நாதம். இந்தத் தாயகப் பிரதேசத்தில் இறைமை சார்ந்த அரசியல் உரிமைகளுடன் தங்களைத் தாங்களே ஆளத்தக்க அதிகார பலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அவர்களின் அரசியல் கோரிக்கையாகும். ...
Read More »ஒற்றை டோஸ் தடுப்பூசி நல்ல பலன் தருகிறது- ஆய்வுத்தகவல்
அர்ஜெண்டினா நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 389 சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரஷியாவில் உருவாக்கப்பட்டது. காய்ச்சல், ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற 2 அடினோ வைரஸ் கலவையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிற இந்த தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக 92 சதவீத செயல்திறனைக் கொண்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் ஏராளமான மக்களுக்கு விரைவாக பாதுகாப்பு அளிப்பதற்கு வசதியாக இரு டோஸ் தடுப்பூசிகளைவிட ஒற்றை டோஸ் தடுப்பூசி பலன் அளிக்குமா என அர்ஜெண்டினா நாட்டில் ...
Read More »விக்ரம் படத்தில் கமலுக்கு இப்படி ஒரு வேடமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். ...
Read More »ஆசிரியர் சங்கம் நிபந்தனைகளுடன் கல்வி அமைச்சரைச் சந்திக்கத் தயார்
ஆசிரியர் சங்கம் நிபந்தனைகளுடன் கல்வி அமைச்சரைச் சந்திக்கத் தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகிய இருவரும் இதுவரை காலம் நித்திரையிலிருந்து தற்போது தான் விழித்து ஆசிரியர் சங்கத்துடன் கலந்துரையாடலுக்கு நேற்றைய தினம் ஒத்துக் கொண்டுள்ளனர் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் இணைய கற்பித்தலிலிருந்து விலகி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார். முதலாவது நிபந்தனையின் கீழ் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே நாங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப் ...
Read More »மன்னார்,முல்லைத்தீவில் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்வு
மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களில் செயற்பட்டு வரும் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு: நாட்டின் கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத் தப்படும் ஆயிரம் மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் செயல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில், ...
Read More »அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது!
நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிகாவல் துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட உள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
Read More »விசேட நாடாளுமன்றக் குழு முன்னிலையில் இன்று பேப்ரல் அமைப்பு
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இன்று (14) பேப்ரல் அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபைமுதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலான இந்த விசேட குழு இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் கூடவிருப்பதுடன், இதில் குழுவின் அழைப்பையேற்றுக் கலந்து கொள்ளவிருக்கும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பேப்ரல்) தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவுள்ளது. அதேநேரம், நாடாளுமன்ற விசேட குழு முன்னிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைப்பது தொடர்பில் ...
Read More »வைரஸ் தொற்றுக்குள்ளும் வாள்கள் ஓயவில்லை ?
அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு இசையமைத்த பாடல்களின் தரத்துக்கு அது இல்லை. ஏன் இப்பொழுது உன்னதமான பாடல்களை எங்களால் உருவாக்க முடியவில்லை” என்று கேட்டேன். 1980களில் 90களில் நாடகங்களுக்கும் அரசியல் தேவைகளுக்கும் பாடல்களை உருவாக்கிய பலரும் இசையமைப்பாளர்களை உறங்க விடுவதில்லை.அவர்கள் உருவாக்கித்தரும் மெட்டுக்களை எடுத்த எடுப்பில் ஏற்றுக் கொள்வதுமில்லை. இது போதாது இது போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்டு தொடர்ச்சியாக நச்சரித்து ஒரு பாடல் அதன் உன்னதமான ...
Read More »
Eelamurasu Australia Online News Portal