மன்னார்,முல்லைத்தீவில் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்வு

மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களில் செயற்பட்டு வரும் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு:
நாட்டின் கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத் தப்படும் ஆயிரம் மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் செயல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில், மன்னார் கல்வி வலயத்தில் பத்திமா ம.ம.வி, எருக்கலப்பிட்டி ம.ம.வி, அரிப்பு (றோ.க)த.க. பாடசாலை, முருங்கன் ம.வி., புனித அன்னம்மாள் ம.வி., நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆகிய ஆறு பாடசாலைகளும் மடு கல்வி வலயத்தில் அடம்பன் ம.ம.வி., பெரிய பண்டிவிரிச்சான் ம.வி. ஆகிய இரண்டு பாடசாலைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்தில் மாங்குளம் ம.வி., ஒட்டுசுட்டான் ம.வி., யோகபுரம் ம.வி., பாலி நகர் ம.வி. ஆகிய நான்கு பாடசாலைகளும், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, உடையார்கட்டு ம.வி., முல்லைத்தீவு ம.வி. ஆகிய மூன்று பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தப் பட்டுள்ளன.