காப்பான் படத்தை தொடர்ந்து மீண்டும் பிரபல இயக்குனரின் படத்தில் சூர்யாவும் ஆர்யாவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ’காப்பான்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், சூர்யாவும் ஆர்யாவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரமின் மகனான துருவை வைத்து இயக்குனர் பாலா இயக்கிய ’வர்மா’ படம் டிராப் ...
Read More »குமரன்
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு படும்பாடு!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக கூறிக்கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவடையப்போகிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துவிட்டது. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு வாக்குறுதியை அளித்துக்கொண்டு பதவிக்கு வந்த சகல ஜனாதிபதிகளையும் போன்று அவரும் வாக்குறுதியை நிறைவேற்றாமலேயே பதவியில் இருந்து இறங்கப்போகிறார். அவரின் சுமார் ஐந்து வருட பதவிக்காலத்தின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து தென்னிலங்கை பிரதான அரசியல் சமுதாயத்தின் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை மாற்றம் குறித்து ஆராய வேண்டிய அவசியத்தை ...
Read More »ஸ்கல்கேண்டியின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!
ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கல்கேண்டி சேஷ் என அழைக்கப்படும் புதிய இயர்போன் இன்டிகோ, டீப் ரெட் மற்றும் ஃபியர்லெஸ் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ஸ்கல்கேண்டி சேஷ் இயர்போன் பத்து மணி நேரத்திற்கான பேட்டரி வழங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் கொண்டு ஏழு மணி நேரத்திற்கு சார்ஜிங் வழங்குகிறது. ...
Read More »ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்த தந்தையின் டைரி குறிப்பு!
அவுஸ்திரேலியாவை சேர்ந்த மாரா (41) என்கிற பெண் கடந்த 2013ம் ஆண்டு வயதில் தன்னைவிட சிறியவரான அந்தோணி (25) என்கிற இளைஞரை திருமணம் செய்துள்ளார். கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த மாராவிற்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் மூன்று வயதில் சார்லோட் என்கிற பெண் குழந்தை இருந்தது. அதனை தொடர்ந்து, ஆலிஸ் மற்றும் பீட்ரிக்ஸ் என்ற இரண்டு வயது இரட்டையர்களை பெற்றெடுத்தனர். சொந்தமாக நடத்தி வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டில் இரவு நேர வேலை செய்து வந்தார். 3 ...
Read More »கென்யா: வகுப்பறை இடிந்து விழுந்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் இன்றூ பள்ளியின் வகுப்பறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியின் டகோரேட்டி புறநகர் பகுதியில் ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான வீடின்றி இவர்களில் பலர் கூடாரம் அமைத்து குடும்பம் நடத்துகின்றனர். இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்காக இயங்கிவரும் திறன் மேம்பாட்டு பள்ளியில் இன்று காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, ஒரு வகுப்பறை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. ...
Read More »இறுதி அறிக்கையை நாளை கூடி ஆராயவுள்ள தெரிவுக்குழு!
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மே தாம் 22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு தமது விசாரணைகளை முடித்துள்ள நிலையில் நாளை தெரிவுக்குழு கூடி அவர்களின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பது குறித்து ஆராயவுள்ளனர். தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாளை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதுவரை காலமாக தாம் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் பெற்றுக்கொண்ட சாட்சியங்கள் அனைத்தையும் கொண்டு இறுதி அறிக்கையை தயாரிக்கவும் அந்த ...
Read More »எவ்வித அபிவிருத்தியும் காணாத கிராம மக்கள்!
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரியாளை நாகபடுவான் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியேறி 10 வருடங்கள் ஆகியும் இதுவரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் இன்று ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் கருத்து கேட்கும் நிகழ்சி திட்டத்தில் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கரியாளை நாகபடுவான் கிராமத்தை சேர்ந்த மக்கள் யுத்த காலப் பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக பல்வேறு ...
Read More »ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்!
ஜனாதிபதி தேர்தல் குறித்த முன்னெடுப்புகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இத்தேர்தலில் பல வேட்பாளர்கள் களமிறங்க உள்ள நிலையில் எந்த ஒரு வேட்பாளரும் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது போகக்கூடும் என்று விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினர் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பர் என எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது. சமூகவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகவுள்ளது. ...
Read More »பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!
மான்ஸ்டர் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். விஷ்ணு விஷால் நடித்த ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்லா அய்யாவு. இவர் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பர். மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. தற்போது ‘ஜெர்சி’ தமிழ் ரீமேக் மற்றும் ‘எப்.ஐ.ஆர்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால். இதனை தொடர்ந்து செல்லாவின் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இதில் நாயகியாக நடிக்க ...
Read More »6 மாதங்களில் 1300 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!
பாகிஸ்தானில் கடந்த ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 6 மாத காலத்தில் மட்டும் 1300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு மீது காஷ்மீரைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் குறித்து அதிக கவனம் செலுத்திவருவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் அதேவேளையில் இன்னொரு பக்கம் மக்களிடம் வறுமை, வேலையின்மை உள்ளிட்ட ஆட்சி நிர்வாகத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாகிஸ்தானில் குந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ...
Read More »
Eelamurasu Australia Online News Portal