மான்ஸ்டர் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
விஷ்ணு விஷால் நடித்த ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்லா அய்யாவு. இவர் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பர். மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.
தற்போது ‘ஜெர்சி’ தமிழ் ரீமேக் மற்றும் ‘எப்.ஐ.ஆர்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால். இதனை தொடர்ந்து செல்லாவின் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இதில் நாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நாயகன் – நாயகி கூட்டணி இணைந்து பணிபுரியும் முதல் படமாக இது அமைந்துள்ளது. ‘மான்ஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். ‘குருதி ஆட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘கசடதபற’, ‘மாஃபியா’ மற்றும் ‘இந்தியன் 2’ ஆகிய படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, விஷ்ணு விஷால் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal