மெல்போர்ன் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்தியா 137 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும் 25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் ...
Read More »குமரன்
அமெரிக்காவிடம் ரகசிய உதவியை நாடிய முஷரப்!
பாகிஸ்தானில் மீண்டும் அதிபர் ஆவதற்கு அமெரிக்காவின் ரகசிய உதவியை முஷரப் நாடியது காணொளி மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தானில் 2001-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகித்தவர் பர்வேஸ் முஷரப் (வயது 75). இவர் 2007-ம் ஆண்டு, அங்கு நெருக்கடி நிலையை கொண்டுவந்தது பெரும் எதிர்ப்புக்கு வழி நடத்தியது. 2008-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது அந்தக்கட்சியும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், முஷரப்பை பதவியில் இருந்து ...
Read More »வாள் வெட்டுக்குழுவை விரட்டியடித்த இளைஞர்கள்!
கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் ஆலய பகுதியில் நேற்றிரவு வாள் வெட்டுக்குழு நடமாடியுள்ளனர். அதன்போது அப்பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் கதிரையில் உட்காந்திருந்த வீட்டின் உரிமையாளர் மீது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வாள் வெட்டினை மேற்கொள்ள முயன்றுள்ளனர். இந் நிலையில் அவர் அபாய குரல் எழுப்பியவாறு வீட்டினுள் ஓடியுள்ளார். அதனை அடுத்து வாள் வெட்டு குழுவினர் கதிரையை வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். வீட்டு உரிமையாளரின் அபாய குரலை அடுத்து அயலவர்களும் அப்பகுதியில் கரப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களும் அவ்விடத்திற்கு விரைந்த ...
Read More »பன்னாட்டு நீதித்துறையின் தலையீடு அவசியமில்லை!-சபாநாயகர் கருஜயசூரிய
பன்னாட்டு நீதித்துறையின் தலையீடு இனியும் இலங்கைக்குத் தேவையில்லை. இலங்கை நீதித்துறையின் சுயாதீனம் அதை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும், சர்வ மதத் தலைவர்களுக்கும் இடையே நேற்றுமுன்தினம் சந்திப்பு நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரச தலைவர் மைத்திரிபால சிறிவேனவுக்கும், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கருத்து மோதல்கள் வலுப்பெற்றன. அதைத் தணித்து இருவருக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். ...
Read More »திடீர் வெள்ளத்தால் திணறிய கிளிநொச்சி முல்லைத்தீவு!
கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கால நிலை மாற்றம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த போதும் 365 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு எவரிடமும் இருந்திருக்கவில்லை. 21 ஆம் திகதி இரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தது. பாரியளவிலான நீர்ப்பாசன குளங்கள் முதல் சிறிய நீர்ப்பாசன குளங்கள் வரை வழமைக்கு மாறாக ...
Read More »100 தடவைகளுக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன்!
ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது இல்லத்தில் தற்போது நடாத்திக்கொண்டிருக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத்தில் சுமந்திரன் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். அதன்போதே ஏக்கிய இராட்சி என்றால் ஒற்றையாட்சி இல்லை என வழமையான தனது வியாக்கியானத்தை முன்வைத்துள்ளார். இதன்போது குறிப்பிட்ட அவர், மகாநாயக்கர்களைச் சந்தித்த ரணில் ஒற்றையாட்சி தீர்வை ...
Read More »எகிப்தில் பிரமிடுகள் அருகே குண்டுவெடிப்பு- 4 பேர் பலி
எகிப்தில் பிரமிடுகள் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவும், அங்கு நடைபெறும் ஒலி ஒளி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காகவும் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று ஒரு பேருந்தில் சென்றனர். அந்த பேருந்து, பிரமிடுகளுக்கு அருகில் உள்ள மரியோத்தியா என்ற இடத்தில் சென்றபோது சாலையோரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் பேருந்து சின்னாபின்னமாகச் சிதறியது. பேருந்தில் பயணம் செய்த 3 சுற்றுலாப் பயணிகள், மற்றும் ...
Read More »கிழக்கில் மேலும் காணிகள் விடுவிக்கப்படும்!-வியாழேந்திரன்
கிழக்கில் இராணுவம், பொலிஸார், கடற்படையினர் வசமுள்ள இன்னும் பல காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வேண்டுகொளுக்கு இணங்க ஜனாதிபதியின் பேரில் காணிகள் சில விடுவிக்கப்பட்டன இது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக யுத்ததால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க ...
Read More »மோட்டோ ஜி7 வெளியீட்டு விவரங்கள்!
மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி மோட்டோ ஜி7 சீரிஸ் இந்த ஆண்டு அறிமுகமான மோட்டோ ஜி6 மாடல்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும். மோட்டோ ஜி7 சீரிஸ் இல் அந்நிறுவனம் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் என ...
Read More »அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர் மீண்டும் கைது!
அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த இலங்கையரான மொஹமட் நிஷாம்தீனை பயங்கரவாதியென தெரிவித்து அவரைக் கைதுசெய்ய சதித்திட்டம் தீட்டி சூழ்ச்சி மேற்கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா மீண்டும் அவுஸ்திரேலிய காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் சாட்சியாளரொருவருக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டு பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அர்சலானின் சூழ்ச்சியால் இலங்கையரான மொஹமட் நிசாம்தீன் சுமார் ஒரு மாதக்காலமாக அவுஸ்திரேலிய உயர் பாதுகாப்பு ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			