அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றிருக்கிறது. விழாவினையும் தொடர்ந்து அட்லாண்டா மாகாணத்தின் திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரையிடப்பட்டு சிறந்த திரைப்படமாக தேர்வு செய்து விருது பெற்றுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடபட்டு கொண்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு திரைப்பட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள ...
Read More »குமரன்
23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை!
நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனையை படைத்தார். நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா (வயது 49). இவர் 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை 1994-ம் ஆண்டு முதல் ஏறி வருகிறார். 2017-ம் ஆண்டு அபா ஷெர்பா, புர்பா தாஷி ஷெர்பா ஆகிய வீரர்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை 21-வது முறையாக ஏறி கமி ரிதா ஷெர்பா சாதனையை பகிர்ந்து கொண்டார். மற்ற 2 ...
Read More »நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி!
டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள, 8 வயது சிறுமி நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி வைத்தாள். நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், தான் ‘டிராகன்’களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய ...
Read More »விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ள தமிழ்க் குடும்பம்!
தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மெல்பர்னில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்படிருந்த நிலையில் இந்த குடும்பத்தின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த குடும்பம் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர். இத்தம்பதிக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு சிறு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தநிலையில் நடேசலிங்கம் ...
Read More »கார்த்தி படத்தில் சீதா!
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி – ஜோதிகா – சத்யராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் நடிகை சீதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் தங்க மகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சீதா அதன்பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இதுகுறித்து சீதாவிடம் கேட்டபோது, அவரும் ...
Read More »காத்தான்குடியும் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானும்!
உள்நாட்டு போர் நிறைவுகண்டு ஒரு தசாப்தத்தை சந்தித்துள்ள இலங்கை மற்றுமொரு காரிருளுக்குள் தள்ளப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு உலகவாழ் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகின்ற முக்கிய பண்டிகையாகும். அன்றைய தினத்தில் சற்றும் எதிர்பார்த்திராத வகையில் முக்கிய மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த தாக்குதல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மாத்திரமல்ல நாட்டில் மீண்டும் அச்சசூழலை உருவாக்கியது. உலகப் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபட்ட உள்ளூர் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் செயற்பாட்டாளர்கள் தான் இலங்கையில் தொடர் தற்கொலை ...
Read More »நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்காலத்திற்கான தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணை அரசவைத் தேர்தலுக்காக வேட்பாளர் மனுக்கள் கோரப்பட்டது யாவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் உலகளாவிய முறையில், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பெரும்பாலான நாடுகளில் கிடைத்த வேட்பாளர் மனுக்களின் அடிப்படையில் அந்நாடுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப் பட்டுள்ளனர் என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஐக்கிய இராச்சியத்தில் தேர்தல் ஆணையம் ஒழுங்கு செய்த தேர்தல் நிறைவேற்றப் பட்டதோடு, தபால் மூலமும் ...
Read More »அவுஸ்திரேலிய கர்ப்பிணி பெண் இந்தியாவில் கொலை!
அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த ரன்வித் கவுர் என்ற கர்ப்பிணி பெண்மணி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பெண் டிஎன்ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Gold Coast பகுதியில் வசித்து வரும் ரன்வித் கவுர் என்ற பெண்மணி கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இந்தியா வந்துள்ளார். மார்ச் மாதம் 22 ஆம் திகதி மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார் . இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி பஞ்சாப்பிலுள்ள Bagge Ke Pipal என்ற பகுதியில் தனது ...
Read More »தாக்குதலை தடுக்க பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுக்கவில்லை!
ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்த வேளையிலேயே, தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இடம்பெற்றத் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு தரப்பினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். நேற்று நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்றத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனவே இந்தத் தாக்குதல் சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், விடுதலைப்புலிகள் கூட பயன்படுத்தவில்லை!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்துமே, மிகவும் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை, இதற்கு முன்னர் சிறிலங்கா இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ பயன்படுத்தியிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறான இரசாயனப் பதார்த்தங்களை உருக்கியே, இந்தக் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தக் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக, மின்குமிழ்களில் பயன்படுத்தும் நுண்ணிழைகளையே பயன்படுத்தியுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. குண்டுதாரிகளின் முதுகுப் பொதியில், இவ்வாறான குண்டு இருந்துள்ளமை தொடர்பில், விசாரணைகளின் போதும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் என்றும் இராணுவ ...
Read More »
Eelamurasu Australia Online News Portal