அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றிருக்கிறது.
விழாவினையும் தொடர்ந்து அட்லாண்டா மாகாணத்தின் திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரையிடப்பட்டு சிறந்த திரைப்படமாக தேர்வு செய்து விருது பெற்றுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடபட்டு கொண்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு திரைப்பட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது.
இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி பிரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal