ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்த வேளையிலேயே, தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இடம்பெற்றத் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு தரப்பினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நேற்று நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்றத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எனவே இந்தத் தாக்குதல் சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal