ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் மாயமானார். ஆஸ்திரியாவின் வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் லெக் என்கிற மலைக் கிராமம் உள்ளது. பனிப்பிரதேசமான இங்கு பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் மாயமானார். அவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
Read More »குமரன்
ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டம்!
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, தற்போது ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது. 25.4 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் பிஞ்ச் 6 ரன்,அலெக்ஸ் காரி 18 ரன்,உஸ்மான் கவாஜா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பீட்டர் ஹேன்ட்ஸ் ...
Read More »மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் பயணம்!
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை சற்றுமுன்னர் மேற்கொண்டுள்ளார். 4 நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் செல்லும் மைத்திரி அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார். நாளையதினம் பிலிப்பைன்ஸ் மலகாநாங்கில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அந்த நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேட்ரே உத்தியோகபூர்வமாக வரவேற்பார். இதன்போது இரு நாட்டின் ஜனாதிபதிகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் அரசியல், பொருளாதார, விவசாய, கலாசார மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன் ...
Read More »நாடாமன்ற கைகலப்பு – அறிக்கையை சட்டமா அதிபருக்கு வழங்க தீர்மானம்!
கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பகர நிலைமைகள் மற்றும் மோதல்கள் குறித்த விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஒப்படைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடு திரும்பியவுடன் துரித நடவடிக்கைகள் இடம்பெறும் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ...
Read More »புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பில் அரசியல் கருத்தொருமிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை!
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரத்தில் செல்வாக்குச் செலுத்துகின்ற மூன்று காரணிகளின் விளைவாக புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பில் அரசியல் கருத்தொருமிப்பு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. முதலாவது காரணி கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுக்கு ( அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் நிபுணர்களின் அறிக்கை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவும் காட்டுகின்ற எதிர்ப்பு. ராஜபக்ச மாத்திரமே இதுவரையில் தனது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிக்காட்டி கருத்து வெளியிட்டிருக்கிறார். சிறிசேனவும் ராஜபக்சவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...
Read More »நான் பந்தா பண்ணுகிறேனா?
பிரேம், கரு, மாரி 2 படம் மூலம் மிகவும் பிரபலமான சாய் பல்லவி, நான் பந்தா பண்ணுவதாக வந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி தனுசுடன் ரவுடி பேபி பாடலுக்கு ஆடியதன் மூலம் தமிழிலும் நன்கு பிரபலமாகி விட்டார். அடுத்து சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கதை சொல்ல சாய் பல்லவியை அணுகுவது சிரமம் என்று ஒரு வதந்தி பரவுகிறது. இதுபற்றி சாய் பல்லவியிடம் கேட்டபோது “நான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண். ...
Read More »மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள்!
மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்தி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் இந்த தீர்மானத்தை ஏற்கனவே நாம் அரச தலைவர்களுக்கு அறிவித்திருந்தோம் எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். பழைய முறைமையில் தேர்தலை நடத்த செய்யவேண்டிய சிறிய திருத்த வரைபையும் நாமே வரைந்தும் கொடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து தமிழ் தேசிய ...
Read More »புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்ய அனைவரும் தயாராக வேண்டும்!-ரஞ்சித் மத்தும பண்டார
அனைரும் புதிய ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கு தயாராக வேண்டுமென அரச நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளுக்கு அமைவாக கட்டாயம் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சகலவித நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் இந்த வருடத்தில் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். ஆறு மாகாணசபைகளுக்கான கால எல்லை நிறைவுக்கு வந்துள்ள நிலையில், நிறைவடையவுள்ள ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ...
Read More »டிரம்ப் – கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்தது. அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வார்த்தை யுத்தம் நடந்தது. இருநாடுகளின் ...
Read More »ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் ஏமாற்றம்
ஆஸ்திரேலிய ஓபனில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் முதல் சுற்றில் அமெரிக்க வீரரிடம் 1-2 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். கிராண்ட் சிலாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் இன்று தொடங்கியது. முதல் சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோவை எதிர்கொண்டார். இதில் முதல் சுற்றை பிரஜ்னேஷ் சிறப்பாக விளையாடி கைப்பற்றினார். ஆனால் 2-வது மற்றும் 3-வது செட்டை 3-6, 3-6 என இழந்தார். இதனால் 1-2 எனத் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			