தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பாலிவுட் நடிகை கரீனா கபூரை பிரதி செய்ததாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். விஜய் சேதுபதி, நடிகை திரிஷா நடித்து வெளியான 96 படத்தின், தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்துள்ளனர். பிரேம் குமார் இயக்கி உள்ளார். படம் பிப்ரவரி 7ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கான புரமோஷன் பணிகளில் சமந்தா தீவிரமாக செயல்பட்டார். அதன் ஒரு பகுதியாக ஜானு என பிரிண்ட் செய்யப்பட்ட புடவையை அணிந்து நடிகை சமந்தா காட்சி அளிக்கும் ...
Read More »குமரன்
சீனாவிலிருந்து அவுஸ்திரேலியா செல்வோருக்கு மேலும் ஒருவாரத் தடை நீடிப்பு !
சீனாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வெளிநாட்டினருக்கான தடை உத்தரவினை மேலும் ஒரு வாரம் நீடித்துள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பெப்ரவரி முதலாம் திகதி விதிக்கப்பட்ட இந்த 14 நாட்கள் தடையுத்தரவானது இன்றையதினம் நிறைவடையும் தறுவாயிலேயே, மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வியட்நாமில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகையானது 16 ஆக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வைரஸின் பரவலை கட்டுப்படுத்த கிராமம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வியட்நாமின் பின் சூயென் மாவட்டத்தில் கம்யூனை சுற்றியுள்ள ஒரு பகுதியை தனிமைப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இன்று ...
Read More »கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கும் குழுவை வழி நடத்தும் தமிழ் விஞ்ஞானி !
அவுஸ்திரேலிய நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் குழுவை இந்திய வம்சாவளி தமிழர் வழி நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த குழுவானது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தங்களின் முதல் ஆய்வில் வெற்றி பெற்று உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 720 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 34,394 பேர் கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,826 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் எகிறும் கொரோனா வைரஸ் பலியால் கலக்கமடைந்துள்ள பல நாடுகள் ...
Read More »மிக் விமான பேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட உதயங்க வீரதுங்க விமான நிலையத்தில் வைத்து கைது!
மிக் விமான பேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று காலை நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Read More »யாழ்.மாவட்டத்துக்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்!
யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்னதாக வாழைச்சேனை, வவுனத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார். இதேவேளை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் கணபதிப்பிள்ளை மகேசன் செயற்பட்டுள்ளார்.
Read More »சீனாவில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கிறது!
சீனாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,500 -ஐ நெருங்கியுள்ளது. இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார மையம் கூறும்போது, “ சீனாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ் ) பாதிப்புக்கு நேற்று மட்டும் 121 பேர் பலியாகியுள்ளனர். இதில் ஹுபே மாகாணத்தில் மட்டும் 116 பேர் பலியாகியுள்ளனர். தற்போது சீனாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 65,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. சீனாவைத் தவிர 25 நாடுகளில் கோவிட்-19 ...
Read More »இளைஞர்களின் பெரும் சக்தி!
அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி நூற்றுக்கணக்கான இளைஞர்களின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த வெற்றியும்கூட. இந்தத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் அவருக்குப் பக்கபலமாக ஒரு இளைஞர் கூட்டமே படுதீவிரமாகப் பணியாற்றியிருக்கிறது. கேஜ்ரிவால் கலந்துகொண்ட ஒவ்வொரு கூட்டத்தையும் ஒருங்கிணைத்தவர் அஸ்வதி முரளிதரன். கேஜ்ரிவாலுடன் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் கைகோத்த பிரித்வி ரெட்டி இன்னும் அவர் கூடவே பயணிக்கிறார். தேர்தல் நன்கொடைகள், தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு இரண்டையும் ப்ரித்வி ரெட்டி கவனித்துக்கொண்டார். ஆஆகவின் ஊடகத் தொடர்புகளுக்கான மேலாளராக இருந்த ஜாஸ்மின் ஷா, தேர்தல் அறிக்கையை வடிவமைக்கும் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். பொருளாதாரத்துக்காக நோபல் ...
Read More »தனுஷுக்கு ஜோடியாகும் நித்யா மேனன்!
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், அடுத்ததாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார். தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பட்டாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சுருளி படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தி படம் ஒன்றிலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கும் இப்படத்திற்கு ’அட்ராங்கி ...
Read More »தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களே தலையெடுக்கும்!
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதனூடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும் சோதனைச்சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வட மாகாணம் இன்று இராணுவ பிரசன்னம் அதிகரித்த மாகாணமாக காட்சியளிக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடமேறிய கையோடு அதிகளவான இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ் மக்கள் நாள்தோறும் இம்சிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. வடக்கில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் ஓமந்தை, கொள்ளர் புளியங்குளம், மாங்குளம், ஆனையிறவு என அனைத்து இடங்களிலும் ...
Read More »வெட்டுக்கிளிகள் நடத்தும் உலகப் போர்!
பரிதவித்துக்கொண்டிருக்கிறது ஆப்பிரிக்கா. யேமன், ஓமன் உள்ளிட்ட நாடுகளும் அப்படியே. கடந்த 25 ஆண்டுகளில் மோசமான வெட்டுக்கிளி படையெடுப்பு தற்போது ஆப்பிரிக்க நாடுகளிலும் சில ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே, உள்நாட்டுப் போர்களாலும் பஞ்சத்தாலும் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள், வெட்டுக்கிளிகளால் பேரபாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. வெட்டுக்கிளிகள் எல்லா இடத்திலும் பரவியிருக்கும் பூச்சியினத்தைச் சேர்ந்தவையாகும். பச்சை நிறம் கொண்ட இந்தப் பூச்சிகளைக் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தினமும் பார்ப்பதுண்டு. தனித்தனிப் பூச்சிகளாக இவற்றால் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. ஆனால், தனித்தனிப் பூச்சிகள் கூட்டம் சேரும்போதுதான் அவற்றின் படையெடுப்பு நிகழ்கிறது. பெருங்கூட்டமாக ...
Read More »
Eelamurasu Australia Online News Portal