உலக அளவில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கி வரலாற்றில் இடம்பிடித்த ஆபத்தான வைரஸ் நோய்கள், 2002-ல் சீனாவில் சார்ஸ், 2009-ல் உலகில் பல நாடுகளில் பன்றிக்காய்ச்சல், 2014-ல் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா, 2016-ல் பிரேசிலில் ஜிகா, 2019-ல் சவுதி அரேபியாவில் மெர்ஸ் ஆகியவை. இந்த வரிசையில் 2020-ல் சீனாவில் கரோனா வைரஸ்! உலகில் உயிர் காக்கும் மருத்துவம் பல வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தாலும், நாட்டில் மக்கள்தொகை பெருகினால், சுத்தமும் சுகாதாரமும் குறைந்தால், சுற்றுச்சூழல் கெட்டுப்போனால், மக்களுக்கு உணவு விஷயத்தில் அக்கறை இல்லாவிட்டால், தடுப்பூசி உள்ளிட்ட ...
Read More »குமரன்
முகுருசாவை வீழ்த்தி முதல் கிரேண்ட் ஸ்லாம் பட்டத்தை தனதாக்கினார் கெனின்!
மெல்போர்னில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்ன்ஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியன் பட்டத்தை சோபியா கெனின் தட்டிச் சென்றுள்ளார். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் இன்று இடம்பெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 15 ஆவது இடத்தில் இருக்கும் 21 வயதான அமெரிக்கா வீரங்கனை சோபியா கெனினும் தரவரிசையில் 32 ஆவது இடத்தில் இருக்கும் 26 வயதான ஜேர்மனி வீராங்கனை கர்பீன் முகுருசாவும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடினர். சுமார் 2 மணித்தியாலங்களும் 03 நிமிடங்களும் நீடித்த இந்த ஆட்டத்தின் ...
Read More »விக்ரம் படத்தில் இருந்து சர்ச்சை நடிகர் நீக்கம்!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ’கோப்ரா’ படத்தில் இருந்து சர்ச்சை நடிகர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் இளம் கதாநாயகன் ஷேன் நிகம். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால், அடுத்ததாக நடிக்க இருந்த வெயில், குர்பானி படங்களுக்கு அதிக சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்ததால், அப்படத்திற்காக நீண்ட நாட்களாக வளர்த்த தனது தலைமுடியை வெட்டி அதிர்ச்சி அளித்தார். இதனால் அவர் நடித்துவரும் வெயில், குர்பானி படங்கள் கைவிடப்பட்டன. இந்த விவகாரம் ...
Read More »தமிழ் தேசிய கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாக உருவாக்கப்பட்ட மாற்றுத் தலைமை கொள்கை ரீதியான மாற்றுத் தலைமையாக இருக்க வேண்டுமே தவிர சாம்பார் கூட்டணியாக இருக்கக்கூடாது. என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான சிறிகாந்தா விமர்சித்துள்ளார். அத்தோடு தமிழ் தேசிய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (1)நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்றீடாக புதிய ...
Read More »தம் உயிரை பணயம் வைத்துள்ள சீன வைத்தியர்கள்!
சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலகையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 259 பேர் உயிரிழந்துள்ளனர். 11,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 15-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சீனாவில் இருக்கும் பிற நாட்டு மக்களை மீட்பதற்காக அந்தந்த நாட்டு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்ற நிலையில், இந்தியாவிலிருந்து சீனா சென்ற சிறப்பு விமானம் 300-க்கும் அதிகமான இந்திய ...
Read More »கங்கனாவின் ஜெயலலிதா தோற்றத்தை வரவேற்கும் ரசிகர்கள்!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனாவின் ஜெயலலிதா தோற்றத்தை ரசிகர்கள் வரவேற்று வருகிறார்கள். பாலிவுட்டில் பிரபல நடிகையான கங்கனா ரணாவத், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தலைவி என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய் இயக்கி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் நெட்டிசன்கள் கேலி செய்து மீம்ஸ் கிரியேட் செய்து வெளியிட்டார்கள். இந்த நிலையில் கங்கனா தற்போது ...
Read More »ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 1,730 வெளிநாட்டினர் தடுத்து நிறுத்தம்!
பாதுகாப்பு விசா மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் செல்பவர்கள் பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதன் மூலம், கடந்த ஆறு மாதத்தில் 1,730 பேரை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதிலிருந்து ஆஸ்திரேலிய எல்லைப்படையும் உள்துறையும் தடுத்து நிறுத்தியுள்ளது. இவர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர் அல்லது சர்வதேச விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2018- 19 நிதியாண்டில், இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் 387 பேர் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில், 205 பேர் மட்டுமே ...
Read More »கோத்தாபயவும் சிறுபான்மை சமூகங்களும்!
உள்நாட்டுப்போரில் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக முதற்தடவையாக இலங்கை ஜனாதிபதியொருவர் ‘ குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறார். இது பற்றி நியூயோர்க் ரைம்ஸ், பி.பி.சி., த ரெலிகிராவ் ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட செய்திகளுக்கு இது வரையில் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் அதிகாரப்பரவலாக்கம் பற்றி ஆராய விரும்புகின்றேன். (1) பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் எதிர்ப்பதன் காரணத்தினால் அதிகாரப்பரவலாக்கம் சாத்தியம் இல்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறியிருக்கிறார். (2) அது உண்மையில் சரியானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் எந்தவிதமான அதிகாரப்பரவலாக்கத்தையும் வழங்குவதை ...
Read More »ஆஸ்திரேலியா ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டொமினிக் தீம்!
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் டொமினிக் தீம் ஸ்வேரேவ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ஐந்தாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் – 7-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இருவரும் முன்னணி வீரர்கள் என்பதால் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பரபரப்பாக சென்றது. முதல் செட்டை ஸ்வேரேவ் 6-3 எனக் ...
Read More »எமக்கான தேசம், எமக்கான தேசியக்கொடி இதுவல்ல என்ற உணர்வே மேலெழுகின்றது!
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை அரசாங்கமே புறக்கணித்த செயற்பாட்டின் மூலமாக எமக்கான தேசம் இதுவல்ல,எமக்கான தேசியக்கொடி இதுவல்ல என்ற உணர்வு தமிழர்களான எம்மத்தியில் எழுகின்றது. ஒரு தேசத்தில், ஒரு தேசிய கொடியில் தமிழர்களை இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சிங்கள பேரினவாத தலைமைகள் வெளிக்காட்டி விட்டது என்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு. சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இயற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இது தமிழர் தரப்பிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			