இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள இந்த முக்கியமான மற்றும் மாற்றமான புதிய அரசியல் சூழலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை தீர்க்கமானதாக உள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டும் விடயத்தில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படும் மற்றும் கடந்த காலங்களில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணை குறித்தும் இந்தக் கூட்டத் தொடரில் ...
Read More »குமரன்
13ஆவது அரசியலமைப்பு குறித்த இந்திய பிரதமரின் அறிப்பை ஏற்கின்றோம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாடொன்றுக்கான முதலாவது விஜயமாக இந்தியாவிற்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, விஜயத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் ...
Read More »இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கூட்டமைப்பு!
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும் எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் ...
Read More »சிவகார்த்திகேயனின் கனவை நனவாக்கிய ஏ.ஆர்.ரகுமான்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் கனவை ஏ.ஆர்.ரகுமான் நனவாக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவர் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `ஹீரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 20-ந் தேதி ரிலீசாக உள்ளது. அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ...
Read More »சுரிநாம் நாட்டை ஆளும் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
சுரிநாம் நாட்டு தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சிறிய நாடான சுரிநாம், 1975 ம் ஆண்டு நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இந்நாட்டின் தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்ஸ் (வயது 74). 1980ம் ஆண்டு சுரிநாம் நாட்டில் ராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது ஆட்சியை பிடித்த பவுட்டர்ஸ் தற்போது வரை சுரிநாம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். போதைப்பொருட்கள் வழக்கிலும் குற்றவாளி என நிருபிக்கப்பட்டுள்ள இவர் மீது ...
Read More »யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு – பேரவை இன்று கூடுகிறது !
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவுக்கான தேர்தல் நாளைத் தீர்மானிப்பதற்கும், துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதி, தராதரங்களை ஆராய்வதற்கான மதிப்பீட்டுக் குழுவை அமைப்பதற்காகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த ஒக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில் இரண்டு புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் உட்பட ஒன்பது பேர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் துணைவேந்தர் தெரிவுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய விண்ணப்பதாரிகளில் ஒருவருமான பேராசிரியர் இ. ...
Read More »பிரித்தானிய தூதுவருடன் சுமந்திரன் சந்தித்து பேச்சு!
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழர் தரப்பு அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சரா ஹூல்ரன் கேட்டறிந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை பிரித்தானியத் தூதுவர் சந்தித்து பேசினார். தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தேர்தலின் பின்னரான அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பிலும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் சுமந்திரன் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்துள்ளார்.
Read More »ஆஸ்திரேலியாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த மலைப்பாம்பு!
ஆஸ்திரேலியாவில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது.ஆஸ்திரேலியாவில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமை இளம்பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். ஏ.டி.எம். மையத்தின் உள்ளே நுழைந்த அவர் ஒரு நிமிடம் ...
Read More »நடனம் ஆடினால் உலகத்தையே மறந்துவிடுவேன்! – தமன்னா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, நடனம் ஆடினால் உலகத்தையே மறந்துவிடுவேன் என தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடிக்கிறார். ஒரு பாடலுக்கு நடனமும் ஆடுகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நடனத்தில் எனக்கு விருப்பம் உண்டு. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது, பரத நாட்டியமோ மேற்கத்திய நடனமோ கற்றுக்கொண்டது இல்லை. சினிமாவுக்கு வந்த கதாநாயகர்கள் சிறப்பாக நடனம் ஆடுகிறார்கள். அவர்களை போல் நம்மால் ஆட முடியுமா என்று மிரண்டேன். நடனம் தெரியாமல் கதாநாயகர்கள் பக்கத்தில் நிற்க ...
Read More »ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா பங்கேற்கவுள்ளார்!
குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய சானியா ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்க இருப்பதாக சானியா நேற்று அறிவித்தார். இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 6 பட்டங்களை வென்ற சாதனையாளர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய அதே வேளையில், உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ...
Read More »
Eelamurasu Australia Online News Portal