அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை முத்தமிட்ட இலங்கையைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவு குடியகழ்வு தடுப்பு முகாமில் கடமையாற்றிய இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 37 வயதான நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். பெண் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை குறித்த இலங்கையர் முத்தமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அளிக்கும் தரப்பினரே இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என நீதவான் Meaghan Keogh தெரிவித்துள்ளார். இதேவேளை, பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ...
Read More »குமரன்
ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: பார்த்திபன்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம் என்று சென்னிமலை முருகனை தரிசித்து விட்டு வெளியே வந்த நடிகர் பார்த்திபன் கூறினார். ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு நடிகர் பார்த்திபன் வந்தார். சென்னிமலை முருகனை தரிசனம் செய்தார். அப்போது பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது:- சூப்பர் ஸ்டார்ரஜினி காந்த் நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதுபற்றி கருத்து கூறலாம். ஆனால் அவர் ஆண்டவன் உத்தரவிட்டால் அரசியலுக்கு வருவேன் என்கிறார். ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லாததால் அவர் அரசியலுக்கு வருவாரா? ...
Read More »அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய அமைப்பு!
அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்குமிடையில், வருடாந்த ஒப்பந்தம் தொடர்பான முரண்பாடு அதிகரித்துள்ள நிலையில், வீரர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை முகாமை செய்வதற்காக, புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. உருவாக்கப்பட்டுள்ள அமைப்பே, வீரர்களின் வர்த்தக ஒப்பந்தங்கள், அனுசரணையாளர்களை முகாமை செய்தல், ஊடகங்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் அணுக்கத்தை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம், அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்புக்கான நிதியளிப்பும் பெறப்படவுள்ளது. தற்போதுள்ள நடைமுறையின்படி, விரர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை, அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை பயன்படுத்துவதோடு, அதற்காக வருடாந்தம், கிரிக்கெட் வீரர்களின் சங்கத்துக்கு நிதியளித்து வருகிறது. ஆனால், அச்சங்கத்துக்கு நிதியளிப்பதை ...
Read More »சிறீலங்கா அனர்த்தம் தொடர்பில் அவுஸ்ரேலியா இரங்கல்!
சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் அவுஸ்ரேலியா இரங்கல் வெளியிட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு கொள்வதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஸொப், இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வாவிற்கு இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். சிறீலங்காவுக்கு தேவை ஏற்பட்டால் உதவிகளை வழங்க ஆயத்தமாக இருப்பதாக அவர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Read More »போன்களில் பொருந்தக்கூடிய புதிய வகை சிப்செட்!
அப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் பொருந்தக்கூடிய புதிய வகை சிப்செட்களை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பிள் ஆலைகளில் நியூரல் என்ஜின் என அழைக்கப்படும் புதிய சிப்செட் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஃபேஷியல் ரெகக்னீஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் புதிய சிப்செட்கள் பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய சாதனங்கள் செயற்கை நுண்ணறிவு பணிகளை இயக்கக்கூடிய வகையில் இருவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒன்று முக்கிய அல்லது மைக்ரோபிராசஸர் மற்றொன்று கிராபிக்ஸ் சிப்செட் அல்லது ஜிபியு. ...
Read More »அவுஸ்ரேலிய தடுப்பு முகாமிலிருந்த சிரிய அகதி கம்போடியாவில் குடியேற்றம்!
அவுஸ்ரேலிய அகதிகள் தடுப்பு முகாமில் ஒன்றான நவுருத்தீவு முகாமிலிருந்த சிரிய அகதி ஒருவர் கம்போடியாவில் குடியமர சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், அவர் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் குறித்த மேலதிக தகவல்கள் எதையும் அவுஸ்ரேலிய குடிவரவு அதிகாரிகள் வெளியிடவில்லை. முன்னதாக,2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா-கம்போடியா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி நவுரு தடுப்பு முகாமில்(Nauru Detention Centre-Australia) உள்ள அகதிகளை கம்போடியாவில் குடியமர்த்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட கம்போடியாவுக்கு ஆஸ்திரேலிய அரசு சுமார் 50 மில்லியன் டாலர்களை கொடுத்தது. இந்த ஒப்பந்தத்தின் ...
Read More »நயினாதீவில் சிறப்பு பூஜையில் 300 பௌத்த பிக்குகள்!
தென்னிலங்கையி்ல் இருந்து வந்த 300 பௌத்த பிக்குகள் இன்று(28) நயினாதீவில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். தென்னிலங்கை பௌத்த அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில், இந்த விசேட பூஜை வழிபாடு நாவற்குழி பௌத்த விகாரையில் இடம்பெறவிருந்தது. நாவற்குழி பௌத்த விகாரையில் நடத்தப்படவிருந்த இந்த வழிபாடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையடுத்து குறித்த பௌத்த விகாரையின் விகாராதிபதி பூஜையை அங்கே நடத்துவது பாதகமான நிலைமைகளை ஏற்படுத்தும் என கருதி பூஜைகளை அங்கே நடத்துவதற்கு அனுமதியை மறுத்திருந்தார்.இந்நிலையிலேயே குறித்த பூஜை வழிபாடு நயினாதீவில் இடம்பெற்று வருகின்றது.
Read More »வீடு கட்ட உதவும் ரோபோக்கள்!
கட்டுமானத் துறையில் நாளொருவண்ணம் பொழுதொருமேனியாகப் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன. கட்டுமான புதிய இயந்திரங்கள் இந்த வகையில் ஏராளமாக வந்துவிட்டன. இந்த இயந்திரங்கள் கட்டுமானப் பணிகளை எளிமையாகவும் விரைவாகவும் முடிக்க உதவி வருகின்றன. இயந்திரங்களுக்குப் போட்டியாக கட்டுமானத் துறையில் ரோபோக்களும் அறிமுகமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கட்டுமானத் துறையில் ரோபோக்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன? மனிதர்கள் செய்யும் வேலைகளை ரோபோக்களை வைத்துச் செய்து முடிக்கும் தொழில்நுட்பங்கள் என்றோ வந்துவிட்டன. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் பலவிதமான வேலைகளைச் செய்துமுடிக்க ரோபோக்கள் நிறைய உள்ளன. சாதாரண வேலைகளையே ...
Read More »திரை விமர்சனம்: தொண்டன்
ஆம்புலன்ஸ் டிரைவராக வரும் மகாவிஷ்ணு (சமுத்திரக்கனி) வெட்டுப்பட்டுக் கிடக்கும் ஒருவரைத் தன் வாகனத்தில் எற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரை கிறார். வெட்டுப்பட்ட நபரின் உயிர் போக வில்லை என்று தெரிந்ததும் அவரை அந்த ஆம்புலன்ஸிலேயே தீர்த்துக் கட்ட எதிராளி நாராயணன் (நமோ நாரா யணன்) தன் ஆட்களுக்குக் கட்டளை யிடுகிறார். அந்தக் கொலைக் கும்பலிடம் இருந்து பாதுகாப்பாக அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைக்கிறார் சமுத்திரக் கனி. இதனால் சமுத்திரக்கனிக்கும், நமோ நாராயணனுக்கும் பகை மூள்கிறது. நாராயணனின் தம்பி சவுந்தர ...
Read More »அவுஸ்ரேலிய அணுசக்தி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்ட மைத்திரி!
மருத்துவம் மற்றும் நோய்களை கண்டறிவதில் அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை பார்வையிடுவதற்காக அவுஸ்திரேலிய அணுசக்தி நிறுவனமான அவுஸ்திரேலிய அணுசக்தி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (26) அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அணுசக்தி பிறப்பாக்கி பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விஜயம் செய்தார்.
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			