தென்னிலங்கையி்ல் இருந்து வந்த 300 பௌத்த பிக்குகள் இன்று(28) நயினாதீவில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். தென்னிலங்கை பௌத்த அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில், இந்த விசேட பூஜை வழிபாடு நாவற்குழி பௌத்த விகாரையில் இடம்பெறவிருந்தது.
நாவற்குழி பௌத்த விகாரையில் நடத்தப்படவிருந்த இந்த வழிபாடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையடுத்து குறித்த பௌத்த விகாரையின் விகாராதிபதி பூஜையை அங்கே நடத்துவது பாதகமான நிலைமைகளை ஏற்படுத்தும் என கருதி பூஜைகளை அங்கே நடத்துவதற்கு அனுமதியை மறுத்திருந்தார்.இந்நிலையிலேயே குறித்த பூஜை வழிபாடு நயினாதீவில் இடம்பெற்று வருகின்றது.
Eelamurasu Australia Online News Portal
