குமரன்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி காவல் துறை அதிபராக நுவன் வேத சிங்க!

பிரதி காவல் துறை  மா அதிபர் நுவன் வேதசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி காவல் துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

கழன்று போகும் கடிவாளம்!

மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தின் சாதனை என்று கூறத்தக்க விடயம், 19 ஆவது திருத்தச் சட்டம் தான். அந்தத் திருத்தச் சட்டத்தை, இல்லாமல் ஒழிப்பதே, இப்போதைய அரசாங்கத்தின் முதல் வேலைத் திட்டமாக இருக்கிறது. இது ஒன்றும், புதிய அரசாங்கத்தின் இரகசியமான வேலைத் திட்டம் அல்ல; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் வெளிப்படையாகவே இதனைக் கூறி வருகிறார்கள். 19 ஆவது திருத்தச் சட்டம் ஆபத்தானது என்றும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதனை இல்லாமல் ஒழிப்பது தான், முதல் வேலையாக இருக்கும் என்றும் அவர்கள் ...

Read More »

‘பிரபலமான பதின்ம பருவ நபர் மலாலா’: ஐ.நா அறிவிப்பு

கடந்த பத்தாண்டுகளில் பதின்ம வயதில் உலகப் புகழ்பெற்றவர் (most famous teenager) என்ற பட்டத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை “பத்தாண்டு கால மதிப்பீடு” (Decade in Review) என்ற பெயரில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம்(2010), சிரிய உள்நாட்டுப்போர் துவக்கம் (2011), பெண்களின் கல்விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள் (2012), எபோலா வைரஸ் தாக்குதல் (2014), காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது (2015) ஆகியவற்றை ...

Read More »

எனக்கு அரசியல் அறிவு இல்லை – டாப்சி

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் டாப்சி, எனக்கு அரசியல் அறிவு இல்லை என்று கூறியிருக்கிறார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா-2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறார். பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற இந்தி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. தற்போது 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார். முன்னணி நடிகையான இவர் அரசியல் கருத்து தெரிவிப்பதில் கவனமாக இருக்கிறார். குடியுரிமை சட்டம் ...

Read More »

47 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!

ஆஸ்திரேலியாவின் Operation Sovereign Borders (OSB) எனும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் கடந்த 1 நவம்பர் முதல் 30 நவம்பர் வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. அக்குறிப்பின் படி, இந்த ஒரு மாதக் காலத்தில் 47 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் மருத்துவ உதவிக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றதாக பல ஆண்டுகளாக நவுரு மற்றும் பப்பு நியூ கினியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள். இம்மாத(டிசம்பர்) தொடக்கத்தில், ...

Read More »

துரித கதியில் பிரெக்ஸிட் விவகாரத்தை முடித்துவிட விரும்பும் ஜோன்ஸனின் முன்னாலுள்ள வேகத்தடைகள்!

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் பிரெக்ஸிட் உடன்படிக்கைக்கு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதையடுத்து தற்போதைய காலக்கெடுவில் (2020 ஜனவரி 31) அன்று அல்லது அதற்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பெரும்பாலும் வெளியேறும் என்பது இப்போது நிச்சயமாகிவிட்டது. முன்னாள் பிரதமர் தெரேசா மே தனது பிரெக்ஸிட் உடன்படிக்கைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்குத் திரும்பத் திரும்ப மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து ஜோன்ஸன் பிரதமராக வந்தார். ஜோன்ஸன் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதியதொரு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொண்டு புதிய தேர்தலை நடத்தினார். அவரது கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் ...

Read More »

இஸ்ரேல்: லிக்குட் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு அபார வெற்றி!

இஸ்ரேல் நாட்டில் ஆட்சி அமைக்க முடியாமல் நாடாளுமன்றத்துக்கு மறுதேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும்கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு வெற்றி பெற்றார். இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த இரண்டாம் முறை தேர்தலில்கூட நேதன்யாகுவின் லிக்குட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத அரசியல் சூழல் நிலவுகிறது. நீலம் வெள்ளை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் தோல்வி அடைந்து விட்ட நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த ஆண்டு ...

Read More »

‘மஹிந்த சிந்தனை’ சம்பிக்க ரணவக்கவினாலேயே எழுதப்பட்டது!

உண்மையில் தற்போதைய அரசாங்கம் அவர்களது திறமையால் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.மாறாக எமது தரப்பினரின் திறமைக்குறைவினாலேயே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இடம்பெற்றுவரும் சில விடயங்கள் நாட்டைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன. எதிர்வரும் பொதுத்தேர்தலில் என்றாலும் மக்களின் கண்கள் திறக்கும் என்று நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் ...

Read More »

வெளியாகியது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி http://doenets.lk என்ற அரசாங்க இணையத்தளத்தினூடாக பரீட்சை பெறுபேறுகளை பரீட்சார்த்திகளை பார்வையிட முடியும்.

Read More »

அந்த கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது !

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, அந்த கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். திரிஷா தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 96′ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விருதுகளை வென்று வருகிறார். சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் திரிஷா பேசும் போது, ” ’96’ படத்துக்கான வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்று. அது நல்ல கதாபாத்திரம் என்று தெரியும். அதுபோன்ற கதாபாத்திரங்களை ...

Read More »