குமரன்

விசா இல்லாமல் அவுஸ்ரேலியாவுக்குள் செல்வதற்கான அனுமதி

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் அவுஸ்ரேலியாவுக்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்படுவதாக வெளியான செய்தி பொய்யானது என அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஓமான் மற்றும் பிஜிஆகிய நாடுகளின் பிரஜைகள் அவுஸ்ரேலியாவிற்குள் விசா இல்லாமல் வந்து போவதற்கான உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதாக பல இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை மறுத்துள்ள குடிவரவுத் திணைக்களம் இது ஒரு வதந்தி எனவும் அவுஸ்ரேலியாவின் குடிவரவுக் கொள்கையில் புதிதாக எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை எனவும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Read More »

மாவீரர்களின் மலர் பொப்பியும் கார்த்திகைப்பூவும்

இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூறிவருகின்றமை தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் ...

Read More »

அவுஸ்ரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடிமர்த்தப்படலாம்

அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் கோரிச்சென்று அவுஸ்ரேலியா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டு,  நவ்று மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் விடுக்கப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிவந்த நிலையில் நவ்று மற்றும் மனுஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 1800 பேர் இவ்வாறு அமெரிக்காவில் குடிமர்த்தப்படலாம் என அச்செய்தி தெரிவிக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக நீண்டநாட்களாக அமெரிக்கா – அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், ரொனால்ட் ரம்ப் அதிபராகப் பதவி ...

Read More »

அஜித்குமாரின் ஏகே57

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித்குமாரும், இயக்குநர் சிவாவும் மீண்டும் இணைந்துள்ள படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்தப் படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை என்பதாலும், அது அஜித்தின் 57-வது படம் என்பதாலும் ஏகே57 என்று குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்தப்படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக கமலின் இளையமகளான அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார். ஏகே57 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று முடிந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடந்தது. இதனை தொடர்ந்து படத்தின் ...

Read More »

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த ஓய்வு

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் இழைத்தவர்கள் எனக் குற்றம்சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். இறுதிக்கட்டப் போரில், மணலாறில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்ந்த சிறிலங்கா இராணுவத்தின் 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த. வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளில் இவரும் ஒருவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர். இவர் 55வயதை எட்டியுள்ள நிலையில், நேற்றுடன் (வியாழக்கிழமை) இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ளார்.

Read More »

இன்று கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் – கார்த்திகை 11

இன்று(11) கனடியத் தேசிய வீரர்நினைவு நாள் அதனை முன்னிட்டு “கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகம்” வெளியிட்டுள்ள அறிக்கை.  நவம்பர் 11.11.2016 வெள்ளிக் கிழமை அன்று, கனடியத் தேசிய வீரர்நினைவு நாள் ஆகும். கனடா வாழ் மக்கள் அனைவரும் கனடியத் தேசியவீரர்கள் அனைவருக்கும ; வீர வணக்கம் செய்யும் இந்த வணக்க நாள், ஒவ்வொருஆண்டும் நினைவு கூரப்படுவதை நாம் அறிவோம். 11.11.2016 அன்று, கனடா வாழ்அனைத்து மக்களோடும், தமிழ் மக்கள் அனைவரோடும் இணைந்து நின்று கனடியத்தமிழர் நினைவெழுச்சி அகவம் தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கி ன்றது. சொந்த ...

Read More »

உலகின் முதல் ஸ்மார்ட் ஸ்கேனர்

ஒவ்வொரு முறையும் ஆவணங்களை ஃபோட்டோ காப்பி மற்றும் ஸ்கேன் செய்ய நாம் தெருத்தெருவாக அலைந்திருப்போம். அதிலும் குறிப்பாக, ஸ்கேன் செய்து நம்முடைய க்ளவுட் ஸ்டோரேஜில் சேமித்து வைக்க பலரின் உதவியை நாட வேண்டியிருக்கும். அதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது உலகின் முதல் ஸ்மார்ட் ஸ்கேனர் உருவாக்கப்பட்டுள்ளது. பப் எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் ஸ்மார்ட் ஸ்கேனரான பப் முழுக்க முழுக்க ஸ்மார்ட்டான வகையில் உருவாக்கப்பட்டது. பிற ஸ்கேனர்களை போல அல்லாமல் இது மிகவும் சிறிய அளவில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பப் மூலம் ...

Read More »

அமெரிக்க செனட்டராக தமிழ் பெண்

சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட, மற்றும் நன்றாக தமிழ் பேசக் கூடிய பிரமிளா ஜெயபாலன் என்னும் பெண், அமெரிக்க செனட்டராக போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க வாஷிங்டன் மானிலத்தில் போட்டியிட்ட அவர் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அமெரிக்க செனட் சபைக்கு தேர்வாகியுள்ளார். அமெரிக்காவில் மிக முக பலம் மிக்க சபையான செனட் சபை விளங்குகிறது. மேலும் ஒரு தமிழர் அமெரிக்க செனட் சபைக்கு தெரிவாகியுள்ளார்.

Read More »

புதிய அதிபர் டிரம்புக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி வாகை சூடியுள்ள டிரம்புக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவுடன் ...

Read More »

விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்டஓர் இளம் தலைவன் மாமனிதர் நடராஜா ரவிராஜ்!

நடராஜா ரவிராஜ் (ஆனி 25, 1962 – கார்த்திகை 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார் . ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், ...

Read More »